[X] Close

தெலங்கானா போலீஸ் செயலி மூலம் குடும்பத்துடன் இணைந்த இளம்பெண்


telangana-police-app-helps-girl-reunite-with-her-family

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 25 Oct, 2018 17:52 pm
  • அ+ அ-

கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக, கம்மா மாவட்டத்தைச் சேர்ந்த போடா ரமாதேவியைக் காணவில்லை. பல நாட்கள் தங்கள் மகளைத்தேடிய பெற்றோர், நம்பிக்கை இழந்தனர். ஆனால் தெலங்கானா போலீஸ் செயலிக்கு நன்றி, இப்போது ரமா தனது குடும்பத்துடன் மீண்டும் இணைந்துவிட்டார்.

வாட்ஸ் அப் போன்ற வசதி இருக்கும் இந்த செயலியில் தகவல், புகைப்படங்கள், வீடியோக்கள், இருக்கும் இடம் பற்றிய தகவல், ஆவணங்கள் என பலவற்றையும் பகிரலாம். முகத்தை அடையாளம் காணும் கூடுதல் வசதியும் இதில் உள்ளது.

ஜனவரி 2014ல் ரமா காணாமல் போனார். தொடர்ந்து கர்லா காவல் நிலையத்தில் அவரது பெற்றோர் புகார் அளித்திருந்தனர். 

எப்படியோ ஹைதராபாதை சென்றடைந்த ரமாவை குழந்தைகள் உதவி மையம் கண்டெடுத்தது. அவரை குழந்தைகள் நல ஆணையத்திடம் ஒப்படைத்தது. பின் ரமா கட்கேசர் பகுதியில் இருக்கும் வழிகாட்டல் மையத்தில் தங்க வைக்கப்பட்டார். 

காணாமல் போனவர்களின் புகைப்படத்தை வைத்து, கட்கேசர் மையத்தில் தங்கியிருப்பவர்களின் முகத்தோடு தேடிப் பார்க்கும்போது ரமா அங்கு இருப்பது தெரிய வந்தது.

உடனே கர்லா போலீஸுக்கு தகவல் செல்ல, அவர்கள் ரமாவின் பெற்றோரைத் தொடர்பு கொள்ள, அவர்கள் உடனடியாக மையத்துக்குச் சென்று ரமாவை அடையாளம் கண்டுகொண்டனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close