[X] Close

போலி க்ளப்பால் ஏமாற்றம்: கபில்தேவ், கோவிந்தா நஷ்ட ஈடு தர நீதிமன்றம் உத்தரவு


kapil-dev-govinda-asked-to-compensate-club-fraud-victims

வடோதரா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்கள் | படம்: ஏ.என்.ஐ

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 24 Oct, 2018 12:39 pm
  • அ+ அ-

கிரிக்கெட் வீரர் கபில்தேவ், நடிகர்கள் கோவிந்தா மற்றும் ரவி கிஷன் ஆகியோர், 18 பேருக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என வடோதரா நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சன் ஸ்டார் என்ற பெயரில் நடத்தப்பட்ட போலி விடுமுறை க்ளப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

2016-ஆம் வருடம், ராமன் கபூர் மற்றும் அவரது மனைவி சீமா கபூர் இணைந்து, சன் ஸ்டார் க்ளப்புக்கான விளம்பர நிகழ்ச்சியை நடத்தினர். இதில் சில பிரபலங்களும் கலந்து கொண்டனர். இந்த க்ளப்பில் உறுப்பினராக பதிவு செய்தால், ஆடம்பர சுற்றுலா ஒன்று இலவசம் என்று அறிவிக்கப்பட்டது. இதை நம்பி பலர் இந்த க்ளப்பில் பணம் கட்டி உறுப்பினராக பதிவு செய்து கொண்டனர். ஆனால் இந்த அறிவிப்பெல்லாம் ஏமாற்று வேலை என்பது பிறகு தெரிய வந்தது.

இந்த க்ளப்பின் இணை இயக்குநர்களாக கிரிக்கெட் வீரர் கபில்தேவ், நடிகர்கள் கோவிந்தா மற்றும் ரவி கிஷன் ஆகியோர் பெயரிடப்பட்டிருந்தனர். இதை நம்பியே பலரும் இந்த க்ளப்பில் சேர்ந்தனர். 

தற்போது புகார் அளித்த ஒவ்வொருவருக்கும் ரூ.15,000 நஷ்ட ஈடாக செலுத்த வேண்டும என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், க்ளப்பின் உரிமையாளர்கள் ராமன் - சீமா தம்பதி, வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்ற மொத்த பணத்தையும் 9 சதவித வட்டியுடன் திருப்பித் தர வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close