[X] Close

நண்பர்கள் வீட்டுக்கு சானிட்டரி நேப்கினுடன் செல்வீர்களா கருத்தை நான் சொல்லவில்லை: ஸ்மிருதி இரானி விளக்கம்


smiriti-irani-explanation-about-sanitary-napkin-comment

  • kamadenu
  • Posted: 23 Oct, 2018 19:03 pm
  • அ+ அ-

சபரிமலை கோயில் விவகாரம் தொடர்பாக பேசும்போதும், நண்பர்கள் வீட்டுக்கும் ரத்தம் சொட்ட சானிட்டரி நேப்கினுடன் செல்வீர்களா என்ற கருத்தை தான் சொல்லவில்லை என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி விளக்கம் அளித்துள்ளார்.

சபரிமலையில் அனைத்து வயது பெண்கள் சென்று வழிபடலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, இது பற்றி கருத்து ஒன்று தெரிவித்ததாக செய்தி வெளியானது. 

ஸ்மிருது இரானியின் கருத்து பல விமர்சனங்களையும் சந்தித்துள்ளது. தற்போது இது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதன் தமிழ் மொழிபெயர்ப்பு பின்வருமாறு:

''என் கருத்துகளைப் பற்றி பல பேர் பேசிக்கொண்டிருப்பதால் நானே என் கருத்தைப் பற்றி பேசுகிறேன்.

'நான் ஒரு இந்து. நான் ஜோராஸ்ட்ரிய மதத்தைச் சேர்ந்தவரைத் திருமாம் செய்துள்ளேன். இதனால் நான் அவர்களின் நெருப்பு கோயிலுக்குள் சென்று வழிபட அனுமதி கிடையாது. அவர்களின் இந்த முடிவை நான் மதிக்கிறேன். இரண்டு ஜோராஸ்ட்ரிய குழந்தைகளின் தாயாக, நான் எந்த நீதிமன்றத்துக்கும் சென்று, எனக்கு வழிபட உரிமையுண்டு என்று நான் கோரப்போவதில்லை. பார்சி, பார்சி அல்லாதவர்கள் என யாரும் நெருப்பு கோயிலுக்குள் செல்வதில்லை'.

இது மட்டுமே நான் சொன்ன கருத்து. மற்றவை அனைத்தும் பொய். ஏதோ நோக்கத்தோடு என்னை வைத்து தூண்டில் போட்டுள்ளனர். அவ்வளவே ".
 

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close