[X] Close

பிரியங்கா காந்தியை காணவில்லை - ரேபரேலியை கலக்கும் போஸ்டர்கள்


priyanka-gandhi-missing-posters-appear-in-rae-bareli

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 23 Oct, 2018 15:56 pm
  • அ+ அ-

தனது கட்சிக்காக தீவிர பிரச்சாரம் செய்த தொகுதிக்கு மீண்டும் வரவில்லை என்பதால், பிரியங்கா காந்தி காணவில்லை என ரேபரேலி தொகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

மேலும், பிரியங்கா, உணர்ச்சிகளை வைத்து மிரட்டுபவர் என்றும் அந்த போஸ்டர்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரேபரேலி தொகுதி பிரியங்கா காந்தியின் தாயார் சோனியா காந்தியின் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. 

ஹர்சந்தர் ரயில் விபத்து, என்டிபிசி வெடி விபத்து போன்ற சம்பவங்களுக்குப் பிறகும் ஏன் பிரியங்கா காந்தி இங்கு வரவில்லை என போஸ்டர்களில் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்களுக்கு பாஜக காரணம் என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. 

காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் சுக்லா, இது பாஜக அல்லது சுயநல காரணங்களுக்காக பாஜகவில் இப்போது இணைந்துள்ளவர்களின் வேலை என்று கூறியுள்ளார்.

பாஜக தரப்பு இதை மறுத்துள்ளது. பிரியங்கா காந்தியை முன்னிலைப்படுத்த காங்கிரஸே இந்த போஸ்டர்களை ஒட்டியுள்ளது என்றும், 2019-ல் சோனியா காந்திக்கு பாஜக பாடம் சொல்லித் தரும் என்றும் கூறியுள்ளது. ரேபரலி தொகுதியிலிருந்து காங்கிரஸை விரட்டும் நேரம் இது என்றும் பாஜக தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close