[X] Close

ஜெயலலிதாவின் புதிய முழு உருவச்சிலை தயார்: விரைவில் மாற்றம்


new-jayalalitha-statue-at-admk-office

  • kamadenu
  • Posted: 23 Oct, 2018 15:55 pm
  • அ+ அ-

அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைக்க ஜெயலலிதாவின் முழு உருவச்சிலை தயாராகிவிட்டது. விமர்சனத்துக்குள்ளான ஜெயலலிதாவின் பழைய சிலை அகற்றப்பட்டு அங்கு விரைவில் அமைக்கப்படும் எனத் தெரிகிறது.

கடந்த பிப்ரவரி 24 அன்று ஜெயலலிதாவின் 7 அடி உயரமுழு உருவச்சிலை திறக்கப்பட்டது. அந்த சிலையில் ஜெயலலிதாவின் கம்பீரம், அவரது உருவம் எதுவும் இல்லை என விமர்சனம் வைக்கப்பட்டது. கடுமையான விமர்சனங்கள் வந்தது. ஜெயலலிதா சிலையின் முகம் குறித்து பலரும் விமர்சனம் செய்தனர். அதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஜெயலலிதா சிலையின் கீழ் அவர் தான் ஜெயலலிதா என்று எழுதிவையுங்கள் என கிண்டலடித்தது குறிப்பிடத்தக்கது.

அதை அடுத்து அமைச்சர்கள் வேறு சிலை விரைவில் அமைக்கப்படும் என்று தெரிவித்தனர். இதற்கான சிலை தயாரிக்கும் பணி ஆந்திராவிலிருக்கும் ரமேஷ் என்கிற சிற்பி தலைமையிலான குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த சிலை ஜெயலலிதா போன்று தத்ரூபமாக இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். இதனால் கடந்த 8 மாதங்களாக சிலை செய்யும் பணி தீவிரமாகவும் கவனமாகவும் நடந்தது.

இந்நிலையில் தற்போது சிலை முழுமையாக தத்ரூபமாகத் தயாராகிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சிலை அகற்றப்பட்டு அங்கு புது சிலை வைக்கப்படும் என அதிமுக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. சிலை வடித்த சிற்பிகள் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்து பீடம் மற்றும் அதன் அமைப்புகளைப் பார்வையிட்டனர்.

இந்நிலையில் தற்போது உருவாகியுள்ள ஜெயலலிதாவின் சிலை மாதிரி வெளியாகி உள்ளது. அதில் ஜெயலலிதாவின் உருவம் சிரித்த முகத்துடன் வலது கையை உயர்த்தி இரட்டை விரலைக் காட்டும் வகையில் தத்ரூபமாக அமைந்துள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close