[X] Close

உரிமையாளரிடமிருந்து ரூ.20 கோடி பணம் பறிக்க முயற்சி: 3 பேடிஎம் பணியாளர்கள் கைது


paytm-employees-arrested

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 23 Oct, 2018 15:36 pm
  • அ+ அ-

பேடிஎம் நிறுவனத்தின் உரிமையாளர் விஜய் சேகர் சர்மாவிடமிருந்து ரூ.20 கோடியை மிரட்டிப் பறிக்க முயற்சித்த மூன்று பணியாளர்களை திங்கட்கிழமை அன்று போலீஸார் கைது செய்தனர். 

இதில் ஒருவர் சர்மாவின் காரியதரிசி. அவர் தான் மொத்த திட்டத்துக்கும் சூத்திரதாரி என போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது. உரிய நேரத்தில் பணம் தரவில்லையென்றால், சர்மாவிடமிருந்து திருடப்பட்ட தனிப்பட்ட தகவல்களை பொதுவில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளனர்.  

ஒரு பெண், அவருக்கு உடைந்தையாக இருவர் என மூன்று பேர் தன் நிறுவனத்திலிருந்து தகவல்களைத் திருடி, அதை வெளியிடாமல் இருக்க ரூ. 20 கோடியைத் தரவேண்டும் என்று மிரட்டியதாக சர்மா போலீஸில் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுத்த போலீஸ், மிரட்டிய மூவரையும் அடையாளம் கண்டு கைது செய்துள்ளது. 

அடுத்தடுத்த விசாரணையில் கிடைக்கும் தகவல்களை வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது. 

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close