[X] Close

அமிர்தசரஸ் ரயில் விபத்துத் துயரம்: நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சொகுசுக் காரில் ‘எஸ்கேப்’- சிசிடிவி காட்சியில் அம்பலம்


punjab-train-mischap

கொடூர ரயில் விபத்துக்கு நீதி கேட்கும் மக்கள். | பிடிஐ

  • kamadenu
  • Posted: 21 Oct, 2018 20:33 pm
  • அ+ அ-

61 பேர் ரயில் விபத்தில் பலியான அமிர்தசரஸ் ராவண வதம் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த உள்ளூர் கவுன்சிலரின் மகன் சவ்ரவ் மதன் மிது, ரயில் விபத்து நடந்த சில நொடிகளில் தன்னுடைய சொகுசுக்காரில் சம்பவ இடத்திலிருந்து வீட்டுக்கு அவசரம் அவசரமாகச் சென்றது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.

இவர்தான் நிகழ்ச்சியின் போது ‘500 ரயில்கள் கடந்து போனாலும் ரயில் பாதையில் நிற்கும் 5000 பேர் கலைய மாட்டார்கள்” என்று பேசியதும் அம்பலமானது.

இந்நிலையில் இவர் விபத்துப் பகுதியிலிருந்து எஸ்கேப் ஆகி சொகுசு காரில் தப்பிச் சென்றது தற்போது போலீஸ் வசம் இருப்பதால், போலீஸார் மதன் மிது, தந்தை விஜய் மதன் இருவரையும் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

கொடூர சம்பவம் நடந்து பெரும் துயரம் ஏற்பட்ட நிலையில் தசரா ராவண வதம் நிகழ்ச்சியை எந்த ஒரு அனுமதியும் பெறாமல் நடத்திய தந்தையும் மகனும் துயரச்சம்பவத்துக்குப் பிறகு 48 மணி நேரம் மாயமானதும் தற்போது அம்பலமாகியுள்ளது.

இவர்கள் இருவரையும் கைது செய்யுமாறு அமிர்தசரஸில் போராட்டம் வெடித்தது. இவர்கள் மாயமானதால் ஆத்திரமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் இவர்கள் வீடுகள் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தினர்.

பஞ்சாப் போலீஸ் இந்தத் துயரச்சம்பவம் குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தாலும் அதில் எந்த ஒரு நபரையும் பொறுப்பாக்கவில்லை. குற்றவாளிகளை இன்னும் அடையாளம் கூடப்படுத்தவில்லை.

இன்று காலை ஆர்பாட்டக்காரர்கள் ஜோதா பதக்கில் போலீஸாருடன் மோதினர். இன்னும் யார் மீதும் வழக்குப் பதிவு இல்லை என்பதே ஆர்பாட்டத்துக்குக் காரணமாக உள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close