[X] Close

என்னைப் பொருத்தவரை அவர் இறந்துவிட்டார்!- தந்தையால் தாக்கப்பட்ட இளம் பெண் 


my-father-is-dead-to-me-says-madhavi

  • பாரதி ஆனந்த்
  • Posted: 19 Oct, 2018 15:26 pm
  • அ+ அ-

ஹைதராபாத்தில் தலித் வாலிபரை விரும்பி திருமணம் செய்து கொண்டதற்காக தன்னையும் தனது கணவரையும் கொலை வெறியுடன் தாக்கியதாக தந்தையை சரமாரியாக வசை பாடியிருக்கிறார் மகள்.

அண்மையில், தெலங்கானாவில் ஒரு ஆனவக் கொலை நடந்தது. தலித் சமூகத்தை சேர்ந்த பிரணய் குமார் அம்ருதா வர்ஷினியை கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்துக்கொண்டார்.  கடந்த செப்டம்பர் மாதம் கர்ப்பிணியாக இருக்கும் தனது மனைவி அம்ருதாவை மருத்துவமனைக்கு அழைத்துவந்த பிரணய், அம்ருதாவின் தந்தை ஏவிய கூலிப்படையினரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். 

அதன் பின்னர் ஹைதராபாத்தில் இன்னொரு ஆணவக் கொலை முயற்சி நடந்தது. தற்போது மூன்றாவதாக ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. ஹைதராபாத்தைச் சேர்ந்த நரசிம்மாச்சாரி. இவர் மகள் மாதவி வேறு சமூகத்தைச் சேர்ந்த சந்தீப் சிங்கை காதல் திருமணம் செய்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மனோகர்சாரி மகளை வஞ்சகமாக பேசி வரவழைத்து தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த மாதவி தற்போது தேறியுள்ளார்.

தனது தந்தை குறித்து அவர் அளித்த பேட்டியில், "நான் என் வீட்டிலிருந்து கிளம்பியபோது உடைகள், படிப்புச் சான்றிதழ்களை எடுத்துவரவில்லை. அவற்றைத் தருவதாக எனது தந்தை கூறினார். ஆனால் அவர் எங்களைத் தாக்குவார் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை.என்னைப் பொருத்தவரை எனது தந்தை இறந்துவிட்டார் " எனக் கூறினார்.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close