[X] Close

பெருமையாக இருக்கிறது; மீண்டும் வருவேன்!- பெண் பத்திரிகையாளர் கவிதா


thank-you-for-supporting-us

  • பாரதி ஆனந்த்
  • Posted: 19 Oct, 2018 14:09 pm
  • அ+ அ-

சபரிமலைக்கு வந்தது பெருமையாக இருக்கிறது மீண்டும் வருவேன் என பெண் பத்திரிகையாளர் கவிதா ஜக்கால் கூறியுள்ளார்.

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் சபரிமலை சன்னிதானத்துக்கு வெகு அருகே சென்று திரும்பியிருக்கிறார் தெலங்கானாவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் கவிதா ஜக்கால்.

நிலப்பந்தல் அருகே சென்றபோது பக்தர்களும் தேவசம்போர்டு அர்ச்சகர்களும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் இருவரையும் திருப்பி அழைத்துவருமாறு கேரள அரசு உத்தரவிட்டது. இதன் பேரில் இருவரும் திருப்பி அழைத்துவரப்பட்டனர்.

வழியில் செய்தியாளர்களிடம் பேசிய கவிதா, "எனக்குப் பெருமையாக இருக்கிறது. இதுவே ஒருவகை வெற்றிதான். நாங்கள் எத்தகையை ஆபத்தை அங்கே எதிர்கொண்டோம் என நீங்களே பார்த்தீர்கள். இருப்பினும் மீண்டும் நான் சபரிமலை வருவேன்.எங்களை ஆதரித்தவர்களுக்கு நன்றி" எனக் கூறியுள்ளார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close