[X] Close

போலீஸ் சீருடையில் பெண் செயற்பாட்டாளரை அழைத்துச் சென்றது தவறு!- காங்கிரஸ்


rehana-fatima-was-given-a-police-uniform

  • பாரதி ஆனந்த்
  • Posted: 19 Oct, 2018 13:27 pm
  • அ+ அ-

சபரிமலை செல்ல விரும்பிய பெண் செயற்பாட்டாளரை போலீஸ் உடையில் அழைத்துச் சென்றது தவறு என கேரள காங்கிரஸ் கட்சியின் ரமேஷ் சென்னிதாலா கூறியுள்ளார்.

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னரும்கூட அங்கு பெண்கள் செல்ல முடியாத அளவுக்கு ஐயப்ப பக்தர்களும், பாஜக, ஆர்.எஸ்.எஸ்., இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சேவ் சபரிமலா என்ற பிரச்சாரமே முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை சபரிமலைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெண் பத்திரிகையாளர் ஒருவரும் பெண் செயற்பாட்டாளர் ஒருவரும் புறப்பட்டனர்.

சபரிமலை சன்னிதானத்துக்கு செல்லும் நிலைப்பந்தலில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். கேரள அரசின் உத்தரவின் பேரில் இருவரும் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் ரமேஷ் சென்னிதாலா, "சபரிமலை சுற்றுலா தலம் அல்ல பக்தர்கள் மட்டுமே அங்கு செல்கின்றனர். கேரள போலீஸாரின் நடவடிக்கை ஏற்புடையதல்ல. இத்தகைய சூழலில் காங்கிரஸ் ஆட்சிப்பொறுப்பில் இருந்தால் இன்னும் நிலைமையை சரியாகக் கையாண்டிருக்கும். நாங்கள் பக்தர்களை அழைத்துப் பேசியிருப்போம். வன்முறை ஏதும் நிகழ்ந்திருக்காது.

ஆளுநரை சந்தித்து நிலைமையை சொல்லியிருக்கிறோம். இந்துக்கள் மட்டுமல்ல எல்லா மதத்தினரும் சபரிமலைக்கு வருகின்றனர். எல்லோருமே வருத்தத்தில் உள்ளனர். பெண் செயற்பாட்டாளர் ரெஹானா பாத்திமாவுக்கு போலீஸ் சீருடை அளித்து அழைத்துச் சென்றுள்ளனர். இது தவறு" எனப் பதிவிட்டிருக்கிறார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close