[X] Close

பிரதமர் காரை வழிமறிப்பேன்!- மிரட்டிய பெண்; முன் கூட்டியே கைது செய்த போலீஸ்


activist-trupti-desai-detained-ahead-of-modi-s-visit-to-shirdi

  • பாரதி ஆனந்த்
  • Posted: 19 Oct, 2018 13:05 pm
  • அ+ அ-

சமூக செயற்பாட்டாளர் த்ருப்தி தேசாய், பிரதமரின் பாதுகாப்பு வாகனத்தை தடுத்து நிறுத்தப்போவதாக எச்சரித்த நிலையில் அவரை போலீஸார் தடுப்புக் காவலில் எடுத்தனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து மத பெண்களையும் உச்ச நீதிமன்றம் அனுமதித்தும் கூட அங்கு பெண்கள் செல்ல எதிர்ப்பு தெரிவித்து பாஜக உள்ளிட்ட கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று பிரதமர் மோடி ஷீரடிக்கு வருகை தருவதை ஒட்டி த்ருப்தி தேசாய் போராட்டம் அறிவித்தார்.

சபரிமலை விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் கலைக்க வேண்டும் இல்லாவிட்டால் அவரது பாதுகாப்பு வாகனத்தை தடுப்பேன் என த்ருப்தி தேசாய் எச்சரித்தார். இதனையடுத்து அவரை போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர்.

இதற்கிடையில், சபரிமலை ஐயப்பன் கோயிலைப் பூட்டி சாவியை ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாகத் தலைமை அர்ச்சகர் கண்டரரு ராஜீவரு தெரிவித்துள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close