[X] Close

சபரிமலை சென்ற இரு பெண்களும் சாமி தரிசனம் செய்யாமலேயே பம்பை திரும்புகின்றனர்


journalist-kavitha-jakkal-and-woman-activist-rehana-fatima-are-now-returning-from-sabarimala

  • பாரதி ஆனந்த்
  • Posted: 19 Oct, 2018 11:10 am
  • அ+ அ-

சபரிமலைக்கு சென்ற பெண் பத்திரிகையாளார் கவிதா மற்றும் சமூக செயற்பாட்டாளர் ரெஹேனா பாத்திமா ஆகியோர் எதிர்ப்பு காரணமாக பம்பைக்கு திரும்புகின்றனர்.

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னரும்கூட அங்கு பெண்கள் செல்ல முடியாத அளவுக்கு ஐயப்ப பக்தர்களும், பாஜக, ஆர்.எஸ்.எஸ்., காங்கிரஸ் என பல்வேறு கட்சியினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பெண் பத்திரிகையாளர் கவிதா, மற்றும் பெண்ணியவாதி ரஹேனா ஆகியோர் சபரிமலை நோக்கிச் சென்றனர். அவர்கள் நிலப்பந்தல் அடைந்தபோது பக்தர்கள் சூழ்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். அவர்களுடன் தந்திரிக்களும் இணைந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், கேரள அரசும் உண்மையான பெண் பக்தர்களை மட்டுமே அனுமதிக்க முடியும் பலத்தை நிரூபிக்கும், போராட்டம் நடத்தும் இடமல்ல சபரிமலை எனக் கூறினார்.

இதனையடுத்து சபரிமலைக்கு சென்ற பெண் பத்திரிகையாளார் கவிதா மற்றும் சமூக செயற்பாட்டாளர் ரெஹேனா பாத்திமா ஆகியோர் எதிர்ப்பு காரணமாக பம்பைக்கு திரும்புகின்றனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர்கள் பம்பை திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.

இது குறித்து கேரள ஐஜி, "சபரிமலை செல்லவந்த பெண் பக்தர்களிடம் நிலவரத்தை எடுத்துச் சொன்னோம். அவர்கள் இப்போது கோயிலில் இருந்து திரும்புகின்றனர். நாங்களும் படைகளை வாபஸ் பெற்று இங்கிருந்து செல்கிறோம். திரும்பிச் செல்ல இருவருமே ஒப்புக் கொண்டனர்" என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close