[X] Close

பெண்ணியவாதிகள் தங்கள் பலத்தை நிரூபிக்கும் இடமல்ல சபரிமலை!- கேரள அமைச்சர்


kerala-minister-condemns-ladies-visiting-sabarimala

  • பாரதி ஆனந்த்
  • Posted: 19 Oct, 2018 10:30 am
  • அ+ அ-

பெண்ணியவாதிகள் தங்கள் பலத்தை நிரூபிக்கும் இடமல்ல சபரிமலை என கேரள அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் சன்னிதானம் அருகே செல்ல பெண் பத்திரிகையாளர் கவிதா ஜக்கால் மற்றும் சமூக செயற்பாட்டாளர் ரெஹேனா பாத்திமா ஆகியோர்  முயன்ற நிலையில், கேரள தேவசம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

அவர் கூறும்போது, "சபரிமலைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பெண்ணியவாதிகள் தங்கள் பலத்தை நிரூபிக்கும் இடமல்ல சபரிமலை. போராட்டம் நடத்தும் தலமும் அல்ல சபரிமலை. அதேவேளையில் உண்மையான பெண் பக்தர்கள் வந்தால் சபரிமலைக்குள் அனுமதிப்போம்" எனக் கூறினார்.

2 பெண்களையும் திரும்பி அனுப்புமாறு கேரள அரசு உத்தரவிட்டதின் பேரில் கேஎரள அமைச்சர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னரும்கூட அங்கு பெண்கள் செல்ல முடியாத அளவுக்கு ஐயப்ப பக்தர்களும், பாஜக, ஆர்.எஸ்.எஸ்., காங்கிரஸ் என பல்வேறு கட்சியினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பெண் பத்திரிகையாளர் கவிதா, மற்றும் பெண்ணியவாதி ரஹேனா ஆகியோர் சபரிமலை நோக்கிச் சென்றனர். அவர்கள் நிலப்பந்தல் அடைந்தபோது பக்தர்கள் சூழ்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். அவர்களுடன் தந்திரிக்களும் இணைந்து கொண்டுள்ளனர். 

இந்நிலையில், கேரள அமைச்சர் கூறியுள்ள இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close