[X] Close

திருப்பதியில் 16,000 லட்டு விற்றதில் மோசடி; விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணை


tirupathi-laddu

திருப்பதி லட்டு

  • kamadenu
  • Posted: 18 Oct, 2018 22:18 pm
  • அ+ அ-

நவராத்திரி பிரம்மோத்ஸவ விழாவில், ரூ.10 லட்சம் மதிப்புள்ள 16,000 லட்டுகளை விற்றதில் மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பதியில் நவராத்திரி விழா விமரிசையாக நடப்பது வழக்கம். புரட்டாசி மாதத்தின் திருப்பதிக்கு கூட்டம் பன்மடங்கு அதிகரிக்கும். அதேபோல், நவராத்திரியிலும் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும். இன்னொரு சிறப்பாக, புரட்டாசி நவராத்திரி காலத்தில், இங்கே நடைபெறும் பிரம்மோத்ஸவம் கூடுதல் சிறப்புகளுடன் நடந்தேறும்.

நவராத்திரி பிரம்மோத்ஸவ விழாவின் 5ம் நாளில், அதாவது கடந்த 14ம் தேதி அன்று, ரூ.10 லட்சம் மதிப்புள்ள 16,000 லட்டுகள் விற்பனையில் மோசடி நடந்துள்ளதாகத் தெரிகிறது. அன்றைய தினத்தில், டிக்கெட் ஸ்கேனர் மிஷின் வேலை செய்யவில்லை என்று சொல்லி, இந்த மோசடி நடந்துள்ளதாக விஜிலென்ஸ் துறைக்கு புகார் சென்றுள்ளதாகத் தெரிகிறது.

இதையடுத்து, விஜிலென்ஸ் அதிகாரிகள் திருப்பதி தேவஸ்தானத்தில் விசாரணையில் ஈடுபட்டனர்.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close