[X] Close

மீடூ புகார் எதிரொலி: மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எம்.ஜே.அக்பர்


mjakbar-resigns-his-minister-post

  • kamadenu
  • Posted: 17 Oct, 2018 18:25 pm
  • அ+ அ-

மீடூ புகார் எதிரொலியாக தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எம்.ஜே.அக்பர்

பெண்கள் தங்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் குறித்து #MeToo (மீடூ) என்ற ஹேஷ்டேக்கின் கீழ் பதிவிட்டு வருகின்றனர். இந்திய அளவில் இது பிரபலமாகி வருகிறது. மத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் இந்த சர்ச்சையில் சிக்கினார். 

அவர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பலரும் பாலியல் புகார்களைத் தெரிவித்தனர். இதனால், பாஜக கடும் பின்னடைவைச் சந்தித்தது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அமைச்சர் அக்பரை கடுமையாக விமர்சித்தன. அவர் பதவியை விட்டு விலக வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

எம்.ஜே.அக்பர் பதவி விலகக் கோரி, அவரின் வீட்டின் முன் பெண் பத்திரிகையாளர்களும் காங்கிரஸ் இளைஞர் அணியும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். தன் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று தன் மீது பாலியர் புகார் கூறிய பத்திரிகையாளர் பிரியா ரமணி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார் எம்.ஜே.அக்பர்.

இதன் தொடர்ச்சியாக தனது அமைச்சர் பதிவியை ராஜினாமா செய்திருக்கிறார் எம்.ஜே.அக்பர். அதைத் தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

என் மீது சுமத்தப்பட்ட தவறான குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் சந்திக்க முடிவு செய்துள்ளேன். தனிப்பட்ட முறையில் வழக்கைச் சந்திக்க உள்ளதால் எனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன். எனது நாட்டுக்காகப் பணியாற்ற வாய்ப்பு அளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கும், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கும் நன்றி

இவ்வாறு எம்.ஜே.அக்பர் தெரிவித்திருக்கிறார்

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close