[X] Close

உச்சத்தில் சபரிமலை போராட்டம்!- பெண் தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயற்சி


a-woman-attempted-to-hang-herself

  • பாரதி ஆனந்த்
  • Posted: 16 Oct, 2018 15:05 pm
  • அ+ அ-

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து பெண் ஒருவர் தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது. இதனை, எதிர்த்து தமிழகம் மற்றும் கேரளாவில் பல போராட்டங்கள் நடந்து வருகின்றன.

தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என கேரளாவில் பாஜக நேற்று பிரம்மாண்ட பேரணி நடத்தியது.
இந்நிலையில், மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை (அக்.17) நடை திறக்கப்பட உள்ள நிலையில், அனைத்து வயது பெண்களும் உள்ளே நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு போராட்டங்கள் வலுத்து வருகின்றனர்.
திருவனந்தபுரத்தில் இன்று பெண் ஒருவர் மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்றார். அவரை அங்கிருந்த பொதுமக்களும் போலீஸாரும் மீட்டனர்.

இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.

இதற்கிடையில், "சபரிமலை செல்லும் பக்தர்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். சட்டம் ஒழுங்கை யாரும் அவர்கள் கையில் எடுத்துக்கொள்ள அனுமதிக்க முடியாது. அரசாங்கம் சீராய்வு மனு ஏதும் தாக்கல் செய்யாது. உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவோம் என நீதிமன்றத்தில் ஏற்கெனவே நாங்கள் சொல்லிவிட்டோம்" என கேரள முதல்வர் பினராயி விஜயன் உறுதியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close