[X] Close

சபரிமலை பக்தர்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்: பினராயி விஜயன்


will-ensure-safety-of-sabarimala-devotees

  • பாரதி ஆனந்த்
  • Posted: 16 Oct, 2018 11:58 am
  • அ+ அ-

"சபரிமலை செல்லும் பக்தர்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். சட்டம் ஒழுங்கை யாரும் அவர்கள் கையில் எடுத்துக்கொள்ள அனுமதிக்க முடியாது. அரசாங்கம் சீராய்வு மனு ஏதும் தாக்கல் செய்யாது. உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவோம் என நீதிமன்றத்தில் ஏற்கெனவே நாங்கள் சொல்லிவிட்டோம்" என கேரள முதல்வர் பினராயி விஜயன் உறுதியளித்துள்ளார்.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது. இதனை, எதிர்த்து தமிழகம் மற்றும் கேரளாவில் பல போராட்டங்கள் நடந்து வருகின்றன.

தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என கேரளாவில் பாஜக நேற்று பிரம்மாண்ட பேரணி நடத்தியது.
இந்நிலையில், மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை (அக்.17) நடை திறக்கப்பட உள்ள நிலையில், அனைத்து வயது பெண்களும் உள்ளே நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு போராட்டங்கள் நடக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சூழலில்தான் "சபரிமலை செல்லும் பக்தர்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்" என கேரள முதல்வர் கூறியிருக்கிறார்.
சபரிமலைக்குள் பெண்கள் நுழைந்தால், எங்களது தற்கொலை குழுவினர் தற்கொலை செய்து தடுப்பார்கள் என கேரள சிவசேனா கட்சி பிரமுகர் மிரட்டல் விடுத்திருந்தார்.

சபரிமலை செல்லும் பெண்களை இரண்டாக வெட்டி, ஒரு பகுதியை டெல்லிக்கும் ஒரு பகுதி கேரள முதல்வர் அலுவலகத்துக்கும் அனுப்ப வேண்டும் என நடிகர் கொல்லம் துளசி சர்ச்சைகுரிய விதத்தில் பேசினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close