[X] Close

நட்சத்திர ஓட்டலுக்கு வெளியே துப்பாக்கியுடன் திரிந்த நபர் முன்னாள் எம்.பி.யின் மகன்!- அடையாளம் தெரிந்தது.


ashish-pandey-son-of-former-bsp-mp-rakesh-pandey

  • பாரதி ஆனந்த்
  • Posted: 16 Oct, 2018 11:14 am
  • அ+ அ-

டெல்லியில் நட்சத்திர ஓட்டலுக்கு வெளியே துப்பாக்கியைக் காட்டி மிரட்டலில் ஈடுபட்ட நபரின் காணொலி வெளியான நிலையில் அவரது அடையாளம் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

டெல்லியின் நட்சத்திர ஓட்டல் வெளியே ஒருவர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டும் வீடியோ வெளியாகி வைரலானது. கடந்த அக்டோபர் 14-ம் தேதி இந்தக் காட்சி பதிவாகியிருந்தது. சில விநாடிகள் ஓடும் அந்த வீடியோவில் பிங்க் நிர கால்சட்டை அணிந்த அந்த நபர் வலது கையில் துப்பாக்கியுடன் ஒரு இளம் பெண் மற்றும் ஆணிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். அங்கு வந்து ஓட்டல் பணியாட்கள் உள்ளிட்டோர் சமாதானப்படுத்துகின்றனர்.

இந்நிலையில் மிரட்டலில் ஈடுபட்டவர் பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் எம்.பி., ராகேஷ் பாண்டேவின் மகன் ஆஷிஷ் பாண்டே எனத் தெரியவந்துள்ளது.

அவர் மீது ஆயுத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close