[X] Close

மத்தியப் பிரதேச தேர்தல் பிரச்சாரத்தை பூஜையுடன் தொடங்கிய ராகுல்


rahul-gandhi-begins-madhya-pradesh-poll-campaign-with-prayers-at-datia-temple

  • பாரதி ஆனந்த்
  • Posted: 15 Oct, 2018 16:42 pm
  • அ+ அ-

மத்தியப் பிரதேச தேர்தல் பிரச்சாரத்தை காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பூஜையுடன் தொடங்கியிருக்கிறார். தாட்டியாவில் உள்ள பீதாம்பரா பீட கோயிலில் அவர் சிறப்புப் பூஜை மேற்கொண்டார்.

முன்னதாக, காலையில் மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியருக்கு வந்த ராகுல் காந்தி. அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தாட்டியா மாவட்டத்தில் உள்ள கோயிலுக்கு வந்தடைந்தார்.

மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத், மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோரும் ராகுலுடன் சென்றனர். 
பின்னர் அங்கு அவர் சிறப்பு பூஜைகளை மேற்கொண்டார். மத்தியப் பிரதேசத்தில் வரும் நவம்பர் 28-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தற்போது அங்கு சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறுகிறது.

அண்மையில் நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்துக்கு முன்னதாகவும் அவர் ஆலைய தரிசனத்துக்குப் பின்னரே பிரச்சாரத்தைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராகுலின் கோயில் பயணங்கள் அரசியல் ரீதியாக விமர்சிக்கப்பட்டு வருவதும் கவனிக்கத்தக்கது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close