[X] Close

பெண் பத்திரிகையாளர் மீது எம்.ஜே.அக்பர் அவதூறு வழக்கு


mj-akbar-files-defamation-case-against-priya-ramani

  • பாரதி ஆனந்த்
  • Posted: 15 Oct, 2018 15:59 pm
  • அ+ அ-

தன் மீது பாலியல் குற்றச்சாட்டு சொன்ன பெண் பத்திரிகையாளர் பிரியா ரமணி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார் அமைச்ச எம்.ஜே.அக்பர்.
மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் எம்.ஜே. அக்பர். இவருக்கு 40 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகைகளில் பணியாற்றிய அனுபவம் உண்டு. 

பெண்கள் தாங்கள் பாலியல் ரீதியாகச் சீண்டல்களுக்கும்,துன்புறுத்தல்களுக்கும் ஆளானதை # மீடூ ஹேஸ்டேக் மூலம் ட்விட்டர் தளத்தில் பதிவிட்டு வெளியிட்டு வருகின்றனர்.

அந்தவகையில், மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது இதுவரை பெண் பத்திரிகையாளர்கள் 7 பேர் பாலியல் புகார்களை ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளனர். 

அதில் அமெரிக்க பத்திரிகையாளர் மஜ்லி டி பு காம்ப், போர்ஸ் பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர் கஜாலா வஹாப், மின்ட் லாங்க் ஆசிரியர் பிரியா ரமணி உள்ளிட்ட பலர் குற்றச்சாட்டு கூறினார்கள்.

இந்நிலையில் தன்மீது முதல் நபராக பாலியல் குற்றம் சாட்டிய பெண் பத்திாிகையாளா் பிரியா ரமணி மீது டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடா்ந்துள்ளாா். தனது வழக்கறிஞா் கரண்ஜவாலா மூலமாக அவா் இந்த வழக்கை தொடா்ந்துள்ளாா்.
தன் மீது ‘ஆதாரமற்ற’ பாலியல் புகார்களைக் கூறுபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பேன் என்று எச்சரித்திருந்த நிலையில் தற்போது வழக்கும் தொடர்ந்திருக்கிறார்.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close