[X] Close

நோ கமெண்ட்ஸ் கூட சொல்லமாட்டேன்: சபரிமலை தீர்ப்பு குறித்து கமல்


kamal-comment-about-sabarimala

  • kamadenu
  • Posted: 15 Oct, 2018 15:17 pm
  • அ+ அ-

நோ கமெண்ட்ஸ் கூட சொல்லமாட்டேன் என்று  சபரிமலை தீர்ப்பு குறித்து கமல் தெரிவித்திருக்கிறார்.

சபரிமலை வழக்கில் அனைத்து வயது பெண்களும் கோயிலுக்குச் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இது தொடர்பாக கேரளாவில் பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆதரவும், எதிர்ப்பும் ஒரு சேர இந்த தீர்ப்புக்கு கிடைத்திருக்கிறது.

இந்தத் தீர்ப்பு தொடர்பாக நாமக்கல் நிகழ்ச்சிகளை முடித்து சென்னை திரும்பிய கமல்ஹாசனிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு கமல் பதிலளித்ததாவது:

இந்த விவகாரம் நான் சம்பந்தப்படாத ஒரு விஷயம். நான் அங்கு சென்றது கிடையாது. அதைப் பற்றி அதிகமாக தெரியாது. அனைத்துமே வெளியிலிருந்து கேட்ட கதைகள் தான். அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு சமமான உரிமை இருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து. என் கருத்தை இந்த விவகாரத்தில் கேட்க வேண்டிய அவசியமில்லை. 

இவ்வாறு கமல் பேசினார்.

மேலும், ஏ.என்.ஐ நிறுவனத்துக்கு விமான நிலையத்தில் அளித்த பேட்டியில் "இது உச்ச நீதிமன்றத்துக்கும் பக்தர்களுக்கும் இடையேயான பிரச்சினை. நான் வெறும் பார்வையாளர் மட்டுமே. இதில் நான் எந்தக் கருத்தும் சொல்லப்போவதில்லை. நோ கமென்ட்ஸ் என்றுகூட சொல்லப்போவதில்லை" என்று தெரிவித்திருக்கிறார் கமல்

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close