[X] Close

கின்னஸ் சாதனைக்காக 3000 கிலோ கிச்சடி


khicdi-for-guiness-record

  • பாரதி ஆனந்த்
  • Posted: 15 Oct, 2018 14:46 pm
  • அ+ அ-

சர்வதேச உணவு தினம் நாளை அக்டோபர் 16-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த விஷ்ணு மனோகர் என்ற சமையல் நிபுணர்  3000 கிலோ கிச்சடி செய்திருக்கிறார்.

நாக்பூரில் நேற்று இந்த சமையல் திருவிழா நடந்தது. இது குறித்து ஏன்.என்.ஐ செய்தி நிறுவனத்துக்குப் பேசிய மனோகர், "நான் உலக சாதனைக்காக முயன்று கொண்டிருக்கிறேன். கிச்சடியை தேசிய உணவாக அறிவிக்க வேண்டும் என்பது எனது விருப்பம். இந்த உணர்வுடனேயே நான் இதை சமைத்திருக்கிறேன். கிச்சடி மிகவும் ஆரோக்கியமான உணவு அதே வேளையில் எல்லோரும் எளிதில் சமைத்து உண்னக்கூடியது. செலவும் குறைவு. 

இதை செய்வதற்கு 275 கிலோ அரிசி, 125 கிலோ பாசிப்பருப்பு, 150 கிலோ சென்னா தால் மற்றும் 3000 லிட்டர் தண்ணீர், 150 கிலோ நெய் பயன்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார். மனோகருக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார். நிருபர்களிடம் பேசிய கட்கரி "மனோகர் புகழ் பெற்ற சமையல் நிபுணர். அவரது சாதனையை நான் மெச்சுகிறேன். அவர் ஓர் இந்திய உணவை உலகப் பிரபலமாக்கியிருக்கிறார். இதற்காக அவருக்கு நன்றி சொல்கிறேன். இன்று மசாலா கிச்சடி செய்துள்ளார். அதன் சுவை மிகச் சிறப்பாக இருந்தது" என்றார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம், 918 கிலோ கிச்சடி செய்ததற்காக இந்தியா கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது. அதை பிரபல சமையல் வல்லுநர் சஞ்சீவ் கபூர் செய்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close