[X] Close

கதவை மூடும்போது விமானத்தில் இருந்து கீழே விழுந்த பணிப்பெண்!


air-india-air-hostess-53-falls-off-delhi-bound-plane-while-closing-door

  • பாரதி ஆனந்த்
  • Posted: 15 Oct, 2018 11:37 am
  • அ+ அ-

ஏர் இந்தியா விமானத்தில் இருந்து பணிப்பெண் ஒருவர் தவறி கீழே விழுந்தார். 

மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு கிளம்ப தயாராக இருந்த ஏர் இந்தியா விமானம் AI 864-ன், கதவை மூடும் போது, 53 வயது பணிப்பெண் ஒருவர் தவறி கீழே விழுந்தார். இதனால் படுகாயமடைந்த அவரை, ஊழியர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விமானத்தில் இருந்து பணிப்பெண் கீழே விழுந்ததால், மும்பை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து ஏர் இந்தியா விமானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "துரதிர்ஷ்டவசமாக எங்களது பணிப்பெண் ஹர்ஷா லோபோ (53) போயிங் விமானத்தின் கதவை மூடும்போது தவறி விழுந்தார். அவருக்கு கால்களில் காயம் ஏற்பட்டிருக்கிறது. முப்பை நானாவதி மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளோம்" எனத் தெரிவித்துள்ளது.

3 ஆண்டுகளுக்கு முன்னதாக ஏர் இந்தியா பொறியாளர் ஒருவர் விமானத்தின் இன்ஜினுக்குள் சிக்கிக் கொண்டார். விமானத்துக்கு சிக்னல் கிடைத்துவிட்டதாக தவறாக புரிந்து கொண்டு இன்ஜினை இயக்கியதால் அந்த விபத்து ஏற்பட்டது.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close