[X] Close

மகாவிஷ்ணுவின் 11-வது அவதாரம் மோடிதான்: பாஜக நிர்வாகி பாராட்டு


bjp-candidate-praises-modi

  • kamadenu
  • Posted: 13 Oct, 2018 18:27 pm
  • அ+ அ-

பிரதமர் நரேந்திர மோடியை மகா விஷ்ணுவின் 11-வது அவதாரம் என புகழ்ந்துள்லார் மகாராஷ்டிர பாஜகவைச் சேர்ந்த அவதுத் வாக்.

தனது ட்விட்டர் பக்கத்தில், "மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி ஜி தான், மகாவிஷ்ணுவின் 11-வது அவதாரம்" என்ற வாக் பகிர்ந்துள்ளார். தொடர்ந்து ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், கடவுளைப் போன்ற ஒரு தலைவரான மோடியைப் பெற்றதற்கு இந்த தேசம் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். 


அவதுத்தின் இந்த செயல் கடவுள்களுக்கு நேர்ந்த அவமதிப்பு என எதிர்கட்சியான காங்கிரஸ் விமர்சித்துள்ளது. மேலும், பாஜகவைச் சேர்ந்தவர்களின் கருத்துகளுக்கு அதிக கவனம் தரக்கூடாது என்றும், ஆளும் பாஜக அரசில் கலாச்சாரம் எப்படி சீரழிந்துள்ளது என்பதற்கும் இது போன்ற கருத்துக்கள் உதாரணம் என்றும் காங்கிரஸ் கூறியுள்ளது. 

காங்கிரஸ் எம்.எல்.ஏவான ஜிதேந்திர அவ்ஹாத், "வாக் ஒரு பொறியியல் பட்டதாரி. தற்போது இவரது பட்டதாரி சான்றிதழ் அசல் தானா என சரிபார்க்க வேண்டும். அவரிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை" என்று கிண்டல் செய்துள்ளார். 

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close