[X] Close

அரக்கு பள்ளத்தாக்கில் ஆதிக்குடிகள் வளர்த்த காபிக்கு சர்வதேச அங்கீகாரம்


indian-coffee-brand-called-araku-produced-by-tribal-youth-in-andhra-pradesh-has-won-a-gold-medal

  • பாரதி ஆனந்த்
  • Posted: 13 Oct, 2018 17:06 pm
  • அ+ அ-

ஆந்திர மாநிலம் அரக்கு பள்ளத்தாக்கில் ஆதிவாசி மக்கள் வளர்த்த காபி சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளது. ஆம் பிரான்ஸ் நாட்டில் நடந்த Prix Epicures OR 2018 போட்டியில் பல்வேறு நாட்டில் பயிரிடப்பட்ட காபியை விஞ்சி நின்றுள்ளது அரக்கு பள்ளத்தாக்கு காபியின் சுவை.

காபி என்றாலே பிரேசில், எதியோபியா பயிர்களுக்குத்தான் மவுசு. இருந்தாலும் இந்தியப் பயிர்களுக்கும் ஓரளவு வரவேற்பிருக்கிறது.
இந்நிலையில்தான் காபிக்கு பெயர்போன நாடுகளின் பயிர்களை விஞ்சி தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது அரக்கு பிராண்ட். இந்தச் செய்தியை வரவேற்றுள்ளார் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா. மஹிந்திரா கார் நிறுவனத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா இது குறித்து ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார்.

அந்த ட்வீட்டில், "இந்தியாவின் மிகவும் பின் தங்கிய பகுதி ஒன்றிலிருந்து விளைவிக்கப்பட்ட காபி பயிருக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இது ஒரு மைல் கல்" எனப் பதிவிட்டிருக்கிறார்.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close