[X] Close

பெண் பத்திரிகையாளர்கள் அப்பாவிகள் இல்லை!- பாஜக பிரமுகர் சர்ச்சை பேச்சு


women-journalists-not-so-innocent-to-be-misused-bjp-leader

  • பாரதி ஆனந்த்
  • Posted: 13 Oct, 2018 16:52 pm
  • அ+ அ-

ஒருவர் வந்து அவர்களை தவறாக பயன்படுத்தும் அளவுக்கு பெண் பத்திரிகையாளர்கள் அப்பாவிகளாக இல்லை என்று கருதுகிறேன் என்று மத்தியப் பிரதேச மாநில பாஜக மகளிர் அணித் தலைவர் லதா கேல்கர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவில் மீ டூ இயக்கம் சூடு பிடித்து வருகிறது. இந்த ஹேஷ்டேக் கீழ் பதிவாகும் புகார்களை விசாரிக்க நிபுணர் குழு அமைக்கப்படும் என மத்திய அரசே கூறியுள்ளது.

இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநில பாஜக மகளிர் அணித் தலைவர் லதா கேல்கர் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.  

"மீ டூ பிரசாரத்தை நான் வரவேற்கிறேன். ஆனால் ஒரு ஆண் தன்னை தவறாகப் பயன்படுத்துவதைக் கூட தடுக்க முடியாத அளவுக்கு பெண் பத்திரிகையாளர்கள் அப்பாவிகளாக இல்லை என்று நான் கருதுகிறேன்" என்று அவர் பதிலளித்தார்.

மத்திய அமைச்சரும், முன்னாள் பத்திரிகையாளருமான எம்.ஜே. அக்பர் மீது பல பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் அத்துமீறல் புகார்களைக் கூறியுள்ளனர். அக்பர் விலக வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. இது குறித்த கேள்விக்கு பதிலளிக்கும்போதே லதா இந்த சர்ச்சைக் கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close