[X] Close

காஷ்மீரைப் பற்றி என்ன தெரியும்? - ட்விட்டரில் கவுதம் காம்பீர் - ஒமர் அப்துல்லா கருத்து மோதல்


gautam-gambhir-omar-abdullah-spar-on-twitter-over-terrorist-s-killing

  • பாரதி ஆனந்த்
  • Posted: 13 Oct, 2018 12:00 pm
  • அ+ அ-

காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தைச் சேர்ந்த மன்னன் வாணி என்ற தீவிரவாதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீருக்கும் காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சியைச் சேர்ந்தவருமான ஒமர் அப்துல்லாவுக்கும் இடையே மோதல் வலுத்துள்ளது.

இது குறித்து காம்பீர், "மன்னன் வாணி கொல்லப்பட்டார். ஓர் அறிவு ஜீவியை துப்பாக்கி தூக்கவிட்டதற்காக நாம் வெட்கப்பட வேண்டும்" எனப் பதிவிட்டிருந்தார். ஒமர் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி ஆகியோரது ட்விட்டரையும் பாஜக, காங்கிரஸ் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தையும் டேக் செய்து இந்த ட்வீட்டை அவர் பதிவிட்டிருந்தார்.

இதற்கு ஒமர் அப்துல்லா, "எனக்கு கிரிக்கெட் பற்றி ஒன்றும் தெரியாது. எனது கிரிக்கெட் அறிவும் காம்பீரின் காஷ்மீர் அறிவும் ஒன்றுதான். இவரால், வாண்யின் சொந்த மாவட்டத்தையோ அல்லது அவரது கிராமத்தைடோ மேப்பில் காட்ட முடியுமா? ஆனால், காஷ்மீர் இளைஞர் ஏன் துப்பாக்கியைத் தூக்குகிறான் என்று எல்லாம் தெரிந்ததுபோல் ட்வீட் செய்திருக்கிறார்" எனப் பதிலடி கொடுத்தார்.

ஆனால் காம்பீர் விட்டபாடில்லை. அதற்கும் ஒரு பதில் ட்வீட் போட்டார். அதில், "ஒமர் அப்துல்லா அவர்களே கோட்டையைவிட்டு வெளியே வாருங்கள். நீங்கள் இந்திய வரைபடத்தைப் பற்றியெல்லாம் பேச வேண்டாம். நீங்கள் என் நாட்டின் வரைபடத்தை மாற்ற நினைக்கிறீர்கள். காஷ்மீர் இளைஞர்களை அரசியலில் ஈடுபடுத்த நீங்கள் என்ன செய்தீர்கள் என்று சொல்லுங்கள்" என்றார்.

அதற்கு ஒமர் அப்துல்லா, "காஷ்மீரைப் பற்றி முழுமையாக அறிந்து கொண்டு வரவும். அப்போது நாம் பேசுவோம். அதுவரை கிரிக்கெட் கேலரியை அலங்கரிக்கவும்" என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close