[X] Close

48 மணி நேரத்துக்கு இணைய சேவை முடக்கமா? - ஒரு சின்ன விளக்கம்


internet-issue-for-48-hours

  • kamadenu
  • Posted: 12 Oct, 2018 18:52 pm
  • அ+ அ-

அடுத்த 48 மணிநேரங்களில் உங்கள் இணைய சேவையில் பிரச்சினையிருந்தால் பதட்டமாகவேண்டாம். இண்டர்நட் கார்ப்பரேஷன் ஆஃப் அசைண்ட் நேம்ஸ் அண்ட் நம்பர்ஸ் (ICANN - ஐகேன்) என்கிற இலாப நோக்கற்ற அமைப்பு, டிஎன்எஸ் எனப்படுகிற களப் பெயர் முறைமையை பாதுகாக்கும் வழிமுறைகளை அப்டேட் செய்யவுள்ளது. அதனால் சர்வதேச அளவில் ஒரு சதவித இணைய பயனர்கள் பாதிக்கப்படலாம் என ஐகேன் அமைப்பு தெரிவித்துள்ளார். இந்த ஒரு சதவிதமே 3.6 கோடி மக்களுக்கு மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

டி.என்.எஸ் என்பதுதான் இணையத்தின் முகவரிப் புத்தகம் போல. நாம் நமது பிரவுசர்களில் டைப் செய்யும் இணைய முகவரியை புரிந்து கொண்டு, அதை இருக்கும் தரவுகளோடு சரிபார்த்து, நாம் நினைக்கும் பக்கத்துக்கு நம்மை அனுப்பி வைக்கும். 

தொடர்ந்து வரும் இணைய அச்சுறுத்தல்களை மனதில் வைத்து, ஐகேன் அவ்வபோது இந்த டிஎன்எஸ் முகவரிகளுக்கான பாதுகாப்பை பலப்படுத்தும். எனவே இந்த நேரத்தில் குறிப்பிட்ட டிஎன்எஸ், அதன் தொடர்பிலிருக்கும் இணையபக்கங்கள் தற்காலிகமாக வேலை செய்யாமல் இருக்கும். அப்டேட் முடிந்தவுடன் வழக்கம்போல நீங்கள் அந்தந்த பக்கங்களை பயன்படுத்தலாம். 

இதனால் ஒட்டுமொத்தமாக இணையதள சேவை முடங்கிவிடாது. ஒவ்வொரு அடுக்காகத்தான் இந்த அப்டேட் நடக்கவிருக்கிறது. எனவே நீங்ல தினசரி பார்க்கும் ஒரு இணையதளம், அடுத்த 48 மணி நேரத்தில் சரியாக வேலை செய்யவில்லை என்றால், கவலை வேண்டாம். 48 மணி நேரத்துக்குப் பிறகும் அது வேலை செய்யவில்லை என்றால் உங்கள் இணைய சேவை நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுங்கள். 

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close