[X] Close

பணியிடத்தில் பெண்களுக்கு எவ்வித பாலியல் துன்புறுத்தலும் ஏற்படக்கூடாது!- அமிதாப்


no-woman-should-be-subjected-to-any-kind-of-misbehaviour-big-b

  • பாரதி ஆனந்த்
  • Posted: 11 Oct, 2018 14:05 pm
  • அ+ அ-

பனியிடத்தில் எந்த பெண்ணுக்கும் எவ்வித பாலியல் துன்புறுத்தலும் ஏற்படக்கூடாது என நடிகர் அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.

கடந்த வருடம் ஹாலிவுட்டில், ஹார்வி வின்ஸ்டீன் என்ற தயாரிப்பாளர், பல வருடங்களாக நடிகைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்து வந்தது வெளிச்சத்துக்கு வந்தது. அப்போது, அலீஸா மிலானோ என்ற நடிகை, ட்விட்டரில் #Metoo (நானும் தான்) என்ற ஹேஷ்டேக்கை குறிப்பிட்டு, தான் துன்புறுத்தலுக்கு ஆளான அனுபவத்தைப் பகிர்ந்திருந்தார். இதோடு, பாதிக்கப்பட்ட மற்ற பெண்களும் இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி, தங்கள் அனுபவங்களைப் பகிர முன்வர வேண்டும் என்று கோரினார். தொடர்ந்து, ஹாலிவுட்டில் மீடூ, ஒரு இயக்கமாக மாறி, இதன் மூலம் பலரது குற்றங்கள் வெளிச்சத்துக்கு வந்தன.

பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான மீ டூ (#MeTooIndia) இயக்கம் இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெற்று வருகிறது.  
இதற்கு பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் அமிதாப் பச்சன் தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார். 
அதில், "எந்த ஒரு பெண்ணுக்கும் பாலியல் துன்புறுத்தல் நேரக்கூடாது. அதுவும் குறிப்பாக பணியிடத்தில் இத்தகைய துயரம் ஏற்படக்கூடாது. சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு இவற்றை உடனே கொண்டுவர வேண்டும். நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வழக்கு பதிவு செய்து சட்டத்துக்கு உட்படுத்த வேண்டும்" என அவர் பதிவிட்டிருக்கிறார்.

மேலும், பாலின சமத்துவம் தொடர்பான கல்வி சமூகத்தில் அவசியம். பெண்கள், குழந்தைகள் நம் சமூகத்தில் குற்றச்செயல்களுக்கு ஆளாவது அதிகமாக இருக்கிறது. மிகச் சிறிய வயதிலேயே சமூக சிந்தனையையும் ஒழுக்க நெறிகளையும் கற்றுக் கொடுப்பது அவசியம் என்றும் அமிதாப் தெரிவித்திருக்கிறார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close