[X] Close

பெண்ணிடம் சில்மிஷம்!- பாஜக செயல்வீரர் நீக்கம்


mumbai-bjp-worker-sacked-for-misbehaving-with-women

  • பாரதி ஆனந்த்
  • Posted: 11 Oct, 2018 13:09 pm
  • அ+ அ-

மும்பை பாஜக பிரமுகரும் தாராவி சட்டப்பேரவைத் தொகுதிக்கான பாஜக தலைவருமான மணி பாலன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
பெண் பிரமுகரிடம் சில்மிஷம் செய்ததற்காகவும் தவறான வார்த்தைகளைப் பிரயோகப்படுத்தியதற்காகவும் அவர் நீக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக மணி பாலன் மீது மும்பை தாராவி காவல் நிலையத்தில் சட்டப்பிரிவுகள் 509, 500 ஆகியனவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக முழுமையான விசாரணைக்காக மும்பை பாஜக விசாரணைக் குழு ஒன்றையும் அமைத்துள்ளது.

இதற்கிடையில், போலீஸார் மணி பாலன் மீது எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். மணிபாலன் சக கட்சி செயல் வீரர் அக்ஸார் ஷேக்கிடம் பேசும்போது சம்பந்தப்பட்ட பெண்ணைப் பற்றி தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தும் ஆடியோ பதிவை வைத்து போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close