[X] Close

தனுஸ்ரீ சொன்ன பாலியல் புகார்: நானா படேகர் மீது போலீஸ் எஃப்ஐஆர் பதிவு 


tanusree-dutta-complaint-fir-against-nana-patekar

  • பாரதி ஆனந்த்
  • Posted: 11 Oct, 2018 10:34 am
  • அ+ அ-

தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா அளித்த புகாரின் பேரில் நானா படேகர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நடிகை தனுஸ்ரீ தத்தா கடந்த 2008-ல் 'ஹார்ன் ஓகே ப்ளீஸ்' இந்தி திரைப்படத்துக்கான பாடல் காட்சி ஒத்திகையின் போது, நடிகர் நானா படேகர் பாலியல் தொந்தரவு கொடுத்தார் என பரபரப்புப் புகார் கூறினார்.

பாலியல் தொந்தரவைத் தொடர்ந்து படப்பிடிப்புத் தளத்தை விட்டு வெளியேறிய தன்னை அரசியல் கட்சி குண்டர்கள் மூலம் நானா படேகர் மிரட்டினார் என்றும் அவர் கூறினார்.

தனுஸ்ரீ தத்தாவின் இந்த புகார் தான் இந்தியாவில் பல துறை சார்ந்த பெண்களும் பணியிடத்தில் பாலியல் தொல்லையை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் #MeToo இயக்கத்தை வலுப்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில், மும்பை ஒஷிவாரா காவல் நிலையத்தில் தனுஸ்ரீ அளித்த புகாரின் பேரில், நானா படேகர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. தவிர இயக்குநர் கணேஷ் ஆச்சார்யா, தயாரிப்பாளர் சாமி சித்திக், இயக்குநர் ராகேஷ் சாரங், மகாராஷ்டிரா நவநிர்மான் தலைவர் ராஜ் தாக்கரே ஆகியோரது பெயர்களும் இணைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் நடிகை தனுஸ்ரீ தத்தா தெரிவித்த புகாரை தொடர்ந்து, நானா படேகர் பத்து நாட்களுக்குள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என மஹாராஷ்டிரா மாநில பெண்கள் நல ஆணையமும் உத்தரவிட்டுள்ளது. மேலும், தனுஸ்ரீயின் புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து மும்பை போலீசார் விளக்கமளிக்க வேண்டும் எனவும் பெண்கள் நல ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close