[X] Close

டிவி சீரியலைப் பார்த்து விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 6 வயது சிறுவன்


6-year-old-boy-made-hoax-call-to-airport

  • பாரதி ஆனந்த்
  • Posted: 15 Sep, 2018 18:36 pm
  • அ+ அ-

டிவி சீரியல்கள் என்ன மாதிரியான தாக்கத்தை இளைய சமூகத்தின் மீது ஏற்படுத்துகிறது என்பதற்கு இந்த செய்தி ஒரு சான்று.

இது குறித்து பாட்னா மாவட்ட எஸ்.பி. ராஜேஷ் சிங் பிரபாகர் கூறும்போது, "பாட்னா விமான நிலையத்துக்கு ஒரு மர்ம அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாகக் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார்.

உடனே விசாரணையைத் தொடங்கினோம். கால் ட்ரேஸ் செய்த போது அழைப்பு கயா மாவட்டம் பெலாகஞ்ச் பகுதியில் இருந்து வந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் அந்த வீட்டிலிருந்த 6 வயது சிறுவன் ஒருவர் மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது. சிறுவனும் இதை ஒப்புக்கொண்டார். கூகுளில் பாட்னா விமான நிலைய எண்ணை தேடி அழைத்ததாகவும் கூறினார்.

வீட்டில் ஓடிய சீரியல் ஒன்றில் க்ரைம் காட்சியைப் பார்த்துவிட்டு திரும்பியபோது ஜன்னல் வழியாக சிறுவன் வானில் பறக்கும் விமானத்தைப் பார்த்திருக்கிறார். உடனே தனது தாயிடம் அந்த விமானம் எங்கு செல்கிறது எனக் கேட்டிருக்கிறார். அவரும் பாட்னா செல்கிறது எனச் சொல்ல, உடனே விஷம வேலையைச் செய்திருக்கிறார்.

அவரை எச்சரித்து பெற்றோரிடம் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பிவைத்தோம்" என்றார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close