[X] Close
 

ஆக்‌ஷன் ரீப்ளே ப்ளீஸ்.. இந்த கபடி ரெய்டை நோட் பண்ணுங்க!


kabadi-player

  • பாரதி ஆனந்த்
  • Posted: 15 Sep, 2018 18:08 pm
  • அ+ அ-

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை.. வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி என்று நடிகர் சந்திரபாபு பாடும் பாடல் ஒன்று உள்ளது.

அதேபோல்தான் திறமையுள்ள விளையாட்டு வீரர்கள் பலருக்கும் சர்வதேச அரங்குகள் கிடைத்துவிடுவதில்லை. ஏதோ ஒரு பட்டி தொட்டி பக்கம் திறமையைக் காட்டிவிட்டு சிற்சில பாராட்டுகளோடு அவர்கள் ஆட்டம் நின்றுவிடுகிறது.
அந்த வரிசையில் கிராமத்து கபடி போட்டியில் பாய்ந்து பாய்ந்து பாயிண்ட் எடுக்கும் இந்த கபடி வீரரை ஆக்‌ஷன் ரீப்ளேயில் பாருங்கள். ஆக்‌ஷன் ரீப்ளே கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது.

சடுகுடு சடுகுடு.. என ஆடும் கபடி தமிழர் பாரம்பரிய விளையாட்டு. கபடியில் இந்தியா சர்வதேச அளவில் தனக்கென தனி முத்திரை வைத்திருக்கிறது. இருந்தாலும் அண்மையில் நடந்து முடிந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முதன் முறையாக இறுதிக்கு முன்னேறாமல் வெளியேறியது இந்திய அணி. ஈரான் அணியிடம் தோற்றுப் போனது. இந்திய அணியின் தோல்விக்கு காரணம் அணியின் வீரர்கள் தேர்வு என்றெல்லாம் சர்ச்சைகள் தற்போது கிளம்பியுள்ளன. 

 

 

ஏதோ ஒரு கிராமத்தில் இருக்கும் இவரைப் போன்ற இளைஞர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா?

இந்த வீடியோவை அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார். சிலர் அதன் கீழ் இந்த ட்வீட்டை மத்திய விளையாட்டு அமைச்சருக்கு டேக் செய்யவும் என்று ஆலோசனையும் கூறியுள்ளனர்.



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close