[X] Close

வைரலான தோனியின் பந்த் ஆதரவு படம்!- உண்மை என்ன?


dhonis-pertol-bunk-picture

  • பாரதி ஆனந்த்
  • Posted: 15 Sep, 2018 16:41 pm
  • அ+ அ-

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, அண்மையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடு தழுவிய பந்த் நடத்தின. கடந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 10) பந்த் நடைபெற்றது.

அதே நாளில் தோனி தனது மனைவி சாக்ஷியுடன் பெட்ரோல் பங்கில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.

டைமிங்கில் வெளியானதால், இந்தப் புகைப்படம் வைரலானது. தோனி பந்திற்கு ஆதரவு கொடுத்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்தநிலையில் இந்த புகைப்படம் குறித்த உண்மையான விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. உண்மையில் அந்தப் படம் சிம்லாவில் உள்ள பெட்ரோல் பங்கில் ஷூட்டிங் எடுக்கும்போது எடுக்கப்பட்டதாம்.

பந்த் சமயத்தில் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் உலா வந்ததால், தோனி பந்திற்கு ஆதரவு கொடுத்தது போன்ற தோற்றம் உருவாகிவிட்டது என்பது தற்போது தெரியவந்துள்ளது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close