[X] Close

வாழ்த்துகள் நம்பி நாராயணன் சார்!- நடிகர் திலீபின் ஃபேஸ்புக் பதிவும் விமர்சனங்களும்


actor-dileep

  • பாரதி ஆனந்த்
  • Posted: 15 Sep, 2018 16:16 pm
  • அ+ அ-

தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க மிக நீண்ட போராட்டம் நடத்தி வெற்றி பெற்றிருப்பவர் விஞ்ஞானி நம்பி நாராயணன். அவருக்கு வாழ்த்து தெரிவித்து தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள பலாத்கார புகாரில் சிக்கிய நடிகர் திலீப் பல்வேறு விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார்.

திலீப் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "வாழ்த்துகள் நம்பி நாராயணன் சார். நீதிக்கான போராட்டத்தில் நீங்கள் வழிகாட்டும் வெளிச்சமாக இருப்பீர்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவின் கீழ் திலீப் ஆதரவாளர்கள் பலரும் எந்த குற்றமும் செய்யாத நீங்களும் இவைரப் போல் நீதியைக் காண்பீர்கள் எனப் பதிவிட்டுள்ளனர். இன்னும் சிலரோ நம்பி நாராயணனுடன் தன்னை ஒப்பிட்டுக் கொள்ள திலீப் தகுதியற்றவர் எனப் பதிவிட்டுள்ளனர்.

திலீபுக்கு கலவையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

நம்பி நாராயணன் கடந்து வந்த பாதை:
இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானியான இவர் மீது கேரள காவல்துறை அதிகாரிகள் தவறான முறையில் திட்டமிட்டு வழக்கு பதிவு செய்தது உறுதியானதால் அவருக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் 
திரவ எரிபொருள் பயன்படுத்தி ராக்கெட் அனுப்பும் திட்டத்தை வடிவமைத்த முக்கியமான விஞ்ஞானி நம்பி நாராயணன். நம்பி நாராயணன், ராக்கெட் தொழில்நுட்பம் தொடர்பான ரகசியங்களை விற்பனை செய்ததாகவும், உளவு பார்த்ததாகவும், கடந்த 1994-ம் ஆண்டு வழக்குத் தொடரப்பட்டது.

சிபிஐ நடத்திய விசாரணையில், இந்த வழக்குக்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என்பது தெரியவந்ததால் அவர் பின்னர் விடுவிக்கப்பட்டார்.

நம்பி நாராயணனுக்கு முக்கியப் பொறுப்புகள் எதுவும் கொடுக்காத நிலையில், 2001-ம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வுபெற்றார். தன்னை வழக்கில் சிக்க வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவர் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பல ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் "விஞ்ஞானி நம்பி நாராயணன் மீது வேண்டுமென்றே வழக்கு தொடர்ந்து அவரை அவமானப்படுத்தி, மன அழுத்தத்துக்கு ஆளாக்கியது உறுதியாகியுள்ளது. சில காவல்துறை அதிகாரிகள் இதில் முனைப்புடன் இருந்துள்ளது தெரிய வந்துள்ளது. வழக்கில் தொடர்பு இல்லை என்பது உறுதி செய்ப்பட்டு விட்டாலும் அவர் சந்தித்த அவமானமும், மன அழுத்தமும் மிக அதிகமானது.

எனவே, நம்பி நாராயணனுக்கு கேரள அரசு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். தவறாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் பின்னணி குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்" என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close