[X] Close
 

இது எப்படி இருக்கு?- வாழ்த்து ட்வீட் போட்டு ராகுலை கலாய்த்த பாஜக


congratulations-on-completing-a-1000-days-out-on-bail

  • பாரதி ஆனந்த்
  • Posted: 14 Sep, 2018 15:23 pm
  • அ+ அ-

ஜாமீனுக்கு வாழ்த்து ட்வீட் போட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கலாய்த்திருக்கிறது பாஜக. "நேஷனல் ஹெரால்டு ஊழல் வழக்கில் ஜாமீனில் வெளிவந்து 1000 நாட்களாகிவிட்டதற்காக ராகுல் காந்திக்கு வாழ்த்து. இது எப்படி இருக்கிறது?" எனக் கலாய்த்திருக்கிறது பாஜக.

இந்த வாழ்த்தை #ஜாமீனில்1000-வதுநாள் (#ZamanatKe1000Din) என்ற ஹேஷ்டேக் கீழ் பதிவு செய்துள்ளது.

நேஷனல் ஹெரால்டு வழக்கு பின்னணி:

கடந்த 1937-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடங்கப்பட்டது. "அசோசியேடட் ஜர்னல் லிமிடெட்" என்ற நிறுவனத்தின் மூலம் “நேஷனல் ஹெரால்டு” என்ற ஆங்கிலப் பத்திரிகையும், “குவாமி ஆவாஸ்” என்ற உருது பத்திரிக்கை யும், “நவ ஜீவன்” என்ற பத்திரிகையும் வெளிவந்தது. 

கடும் நிதி நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் இந்தப் பத்திரிகை களை வெளியிடுவது கடந்த 2008-ம் ஆண்டு நிறுத்தப்பட்டது.

காங்கிரஸ் கட்சியிடம் ரூ.90 கோடி கடன் வாங்கி சமாளித்தது அசோசியேடட் ஜெர்னல் நிறுவனம். அதன்பின்னர், ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துகளைக் கொண்ட அசோசியேடட் ஜர்னல் நிறுவனத்தின் பங்குகள், சோனியா, ராகுல் ஆகியோரால் ரூ.50 லட்சம் செலுத்தி, 83.5% சதவீதப் பங்குகளைக் கொண்ட 'யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட்' எனும் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது.

நேஷனல் ஹெரால்டு பத்திரி கைக்குச் சொந்தமான 'அசோசியேடட் ஜர்னல்ஸ்' நிறுவனத்தின் சொத்துகளை 'யங் இந்தியா' என்ற நிறுவனத்தின் மூலம் முறை கேடாகக் கையகப்படுத்தியதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் பொருளாளர் மோதிலால் வோரா, பொதுச்செயலாளர் ஆஸ்கர் பெர்னாண்டஸ், சுமன் துபே, சாம் பிட்ரோடா ஆகியோருக்கு எதிராக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வழக்குத் தொடர்ந்தார்.

வழக்கின் விசாரணை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close