மல்லையாவுடனான உறவில் பாஜக பரிசுத்தத்தை நிரூபிக்க வேண்டும்: யஷ்வந்த் சின்ஹா

மல்லையா வெளிநாடு செல்ல ஜேட்லி உதவினாரா என்ற வாத விவாதங்கள் வலுத்துள்ள நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த சின்ஹா ஒட்டுமொத்த பாஜகவையும் விமர்சித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "விஜய் மல்லையாவுடனான உறவு விவகாரத்தில் நிதியமைச்சர் மட்டுமல்ல ஒட்டுமொத்த பாஜகவினரும் தங்களை பரிசுத்தமானவர்கள் என நிரூபிக்க வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.
யஷ்வந்த சின்ஹா முந்தைய பாஜக ஆட்சியின்போது நிதி அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில், பாஜகவிலிருந்து விலகி கட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இவரது மகன் ஜெயந்த் சின்ஹா மத்திய இணை அமைச்சராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.