[X] Close
 

மோடி - நீரவ் சந்திப்பு; ஜேட்லி - மல்லையா சந்திப்பு: நடந்தது என்ன?- கேஜ்ரிவால் கேள்வி


people-want-to-know-kejriwal

  • பாரதி ஆனந்த்
  • Posted: 13 Sep, 2018 20:17 pm
  • அ+ அ-

விஜய் மல்லையா வெளிநாடு செல்வதற்கு நிதியமைச்சர் அருண் ஜேட்லி உதவியதாக சுப்பிரமணியன் சுவாமி மறைமுகமாக குற்றம் சாட்டியுள்ள டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலும் பிரதமர் மற்றும் நிதியமைச்சரை சாடியிருக்கிறார். 

இது தொடர்பாக அர்விந்த் கேஜ்ரிவால் தனது ட்விட்டரில், "நீரவ் மோடி நாட்டைவிட்டு செல்லும்முன் பிரதமர் மோடியை சந்திக்கிறார்! விஜய் மல்லையா தப்பி ஓடுவதற்கு முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை சந்திக்கிறார். இந்த சந்திப்புகளுக்கு பின்னணியில் என்னவிருக்கிறது என்பதை மக்கள் அறிந்துகொள்ள விரும்புகின்றனர்" எனப் பதிவிட்டுள்ளார்.
பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்ற தொழிலதிபர் விஜய் மல்லையா அதனை திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி ஓடினார். அவர் மீது பல்வேறு வங்கிகள் சார்பில் தொடர்பட்ட வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, தேடப்படும் குற்றவாளியாகவும் அ றிவிக்கப்பட்டுள்ளார். அவரை கைது செய்யவும் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரது ரூ.13,900 கோடி சொத்துக்களை அமலாக்கப்பிரிவு முடக்கியுள்ளது.

லண்டனில் உள்ள விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

[X] Close