[X] Close
 

இப்பதான் சு.சுவாமி சரியாக கணித்திருக்கிறார்!- திவ்யா பாராட்டு


this-is-the-only-instance-where-subramanian-swamy-predicted-something-correctly

  • பாரதி ஆனந்த்
  • Posted: 13 Sep, 2018 19:50 pm
  • அ+ அ-

இந்த முறைமட்டும் தான் சுப்பிரமணியன் சுவாமி ஒரு விஷயத்தை சரியாக கணித்திருக்கிறார் என ட்வீட் செய்திருக்கிறார் காங்கிரஸ் கட்சியில் சமூக வலைதள பொறுப்பாளரான திவ்யா ஸ்பந்தனா.

விஜய் மல்லையா வெளிநாடு செல்வதற்கு நிதியமைச்சர் அருண் ஜேட்லி உதவியதாக சுப்பிரமணியன் சுவாமி மறைமுகமாக குற்றம் சாட்டியிருப்பதைத்தான் காங்கிரஸ் கட்சியின் திவ்யா ஸ்பந்தனா இவ்வாறு வரவேற்று ட்வீட் செய்துள்ளார்.

முன்னதாக சுப்பிரமணிய சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் மல்லையா இந்தியாவை விட்டு வெளியேற இரண்டு காரணங்கள் மட்டுமே. ஒன்று சிபிஐ-யால் பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸ் கடந்த 2015 அக்டோபர் 24-ல் வலுவிழக்கச்செய்யப்பட்டிருக்கிறது. இதன் பின்னணியில் இருந்த சிங்கம் யார்? இரண்டாவதாக நாடாளுமன்றத்தில் அருண் ஜேட்லியை சந்தித்த விஜய் மல்லையா தான் லண்டன் செல்லவிருப்பதாகக் கூறியிருக்கிறார்" எனப் பதிவிட்டிருந்தார்.

இவ்விவகாரம் சர்ச்சையாகியுள்ள நிலையில் திவ்யா ஸ்பந்தனா ட்வீட் செய்திருக்கிறார்.



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close