[X] Close

விஜய் மல்லையா குறித்து சு.சுவாமி ட்வீட்டால் சர்ச்சை


subramaniya-swamy-speech-creates-issue

  • kamadenu
  • Posted: 13 Sep, 2018 13:05 pm
  • அ+ அ-

விஜய் மல்லையா குறித்து பாஜகவைச் சேர்ந்த சுப்பிரமணிய சுவாமி ட்வீட்டால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.

வங்கிக் கடன் மோசடியில் சிக்கி லண்டனில் வழக்கை எதிர்கொண்டு வரும் தொழிலதிபர் விஜய் மல்லையா, நாட்டை விட்டுக் கிளம்பும் முன் நிதியமைச்சர் அருண் ஜேட்லியைச் சந்தித்ததாகத் தெரிவித்துள்ளார். இதனை ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

விஜய் மல்லையாவின் பேச்சுக்கு அருண் ஜேட்லி “அவரது பேச்சு தவறானது அதாவது நடந்தது என்ன என்ற உண்மையை அவர் கூற்று பிரதிபலிக்கவில்லை. 2014லிலிருந்தே நான் அவருக்கு சந்திக்க எந்த அப்பாயிண்ட்மெண்ட்டும் கொடுக்கவில்லை. எனவே அவர் என்னைச் சந்தித்தார் என்ற பேச்சு எழவே வாய்ப்பில்லை” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

விஜய் மல்லையாவின் பேச்சை எதிர்க்கட்சியினர் கையில் எடுத்திருக்கிறார்கள். இது தொடர்பாக அருண் ஜேட்லி பதவி விலக வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். 

இந்நிலையில், ஜூன் 12-ம் தேதி  தனது ட்விட்டர் பக்கத்தில் பாஜகவைச் சேர்ந்த சுப்பிரமணி சுவாமி ”மல்லையாவால் இந்தியாவை விட்டு வெளியேற முடியாததற்குக் காரணம் அவர் விமான நிலையங்களில் கண்காணிக்கப்படும் நபராக அறிவிக்கப்பட்டு அது அமலில் இருந்ததுதான். பிறகு அவர் டெல்லிக்கு வந்து யாரோ செல்வாக்கு மிகுந்த ஒருவரை சந்தித்துள்ளார். அவர் அந்த அறிவிப்பில், அவரது புறப்பாடை தடுக்க வேண்டும் என்பதை, புறப்பாடை தெரிவிக்க வேண்டும் என்று மாற்றினார். கண்காணிக்கப்படும் நபர் அறிவிப்பை மாற்றியமைத்த அந்த நபர் யார்? ” என்று தெரிவித்திருந்தார். இதனைக் குறிப்பிட்டு பலரும் இப்போது கருத்து தெரிவித்து வருகிறார்கள். 

மேலும், இந்த சர்ச்சை உருவானதைத் தொடர்ந்து தற்போது சுப்பிரமணிய சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “எனக்குக் கிடைத்த தகவல்களின் படி, நிதி அமைச்சகத்திலிருந்து வந்த உத்தரவின் பேரில் தான், அக்டோபர் 24, 2015 அன்று, சிபிஐ பிறப்பித்த கண்காணிக்கப்படும் நபர் அறிவிப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மல்லையா தப்பிச்சென்ற விஷயத்தில் இப்போது நம்மிடம் மறுக்க முடியாத இரண்டு உண்மைகள் உள்ளன.

1. அக்டோபர் 24, 2015 அன்று, தடுக்க வேண்டும் என்பதை தெரிவிக்க வேண்டும் என்று மாற்றப்பட்டதால் மல்லையா 54 பெட்டிகளுடன் சென்றுள்ளார். 

2. மல்லையா லண்டன் புறப்பட்டுச் செல்வதை பாராளுமன்றத்தில் இருந்த நிதி அமைச்சரிடம் தெரிவித்துவிட்டுதான் சென்றிருக்கிறார்.” என்று தெரிவித்திருக்கிறார்.

பாஜக-வில் இருக்கும் சுப்பிரமணிய சுவாமியே இவ்வாறு ட்வீட் செய்திருப்பதால் மீண்டும் சர்ச்சை உருவாகியுள்ளது.
 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close