[X] Close

ஆட்டம் உதவுற மாதிரி சட்டம் உதவல!- டான்ஸ் மூலம் சிக்னல் காட்டும் போலீஸுக்கு மவுசு


this-cop-has-a-quirky-way-to-manage-traffic-on-roads

  • பாரதி ஆனந்த்
  • Posted: 12 Sep, 2018 11:40 am
  • அ+ அ-

அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பிகூட உதவமாட்டாங்கன்னு! சொல்வார்கள் இங்கே ஒரு போலீஸ்காரருக்கு போக்குவரத்தை சீர் செய்ய அவர் போடும் ஆட்டம் உதவுற மாதிரி சட்டம்கூட உதவவில்லை என்கிறார்.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் போக்குவரத்தை ஒழுங்கும் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார் பிரதாப் சந்திர கந்த்வால்(33) என்ற இளைஞர். இவர் ஊர்க்காவல் படையில் இருக்கிறார். அண்மையில் இவருக்கு போக்குவரத்து காவலர் பணி வழங்கப்பட்டது. 

அந்தப் பகுதியில் இவர் இப்போது மிகவும் பிரபலமாகிவிட்டார். காரணம் எவ்வளவு பெரிய நெருக்கடியாக இருந்தாலும்கூட தனது அழகான நடன அசைவுகள் மூலமே போக்குவரத்தை சீர் செய்துவிடுவாராம்.

 

 

இது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், "நான் எனது நடன அசைவுகள் மூலமே போக்குவரத்து சிக்னல்களை மக்களுக்கு கொண்டு சேர்த்து விடுகிறேன். ஆரம்பத்தில் மக்கள் எந்த விதிகளுக்கும் ஒத்துழைக்கவில்லை. போகப்போக எனது ஸ்டைல் அவர்களை ஈர்த்துவிட்டது. அவர்களும் இப்போதெல்லாம் விதிகளை மதித்து எனக்கு ஒத்துழைக்கின்றனர்" என்றார்.
வீடியோ இணைப்பைக் காண:

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close