[X] Close

இதுவே இலங்கையாக இருந்திருந்தால் எங்கள் முடிவே வேறாக இருந்திருக்கும்: ராஜபக்சே


if-this-was-in-sri-lanka-we-would-have-taken-a-different-line

  • பாரதி ஆனந்த்
  • Posted: 12 Sep, 2018 11:12 am
  • அ+ அ-

ராஜீவ் கொலை வழக்கில் 27 வருடங்களாக சிறையில் உள்ள 7 பேர் விடுதலை தொடர்பான கேள்விக்கு இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே, "இதுவே இலங்கையாக இருந்திருந்தால் எங்கள் முடிவே வேறாக இருந்திருக்கும்" என பதிலளித்துள்ளார்.

இலங்கை அதிபர் ராஜபக்ச இந்தியா வந்துள்ளார். அவர் இந்தியா வந்துள்ள நேரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கிறது. காரணம், ராஜீவ் கொலை வழக்கில் கைதான நளினி, சாந்தன், முருகன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை கூடி தீர்மானம் நிறைவேற்றி அதை ஆளுநருக்கு அனுப்பியுள்ளது.

இந்நிலையில்தான், இந்தியா வந்துள்ளார் ராஜபக்சே. இது குறித்த கேள்விக்கு அவர், "தமிழக அமைச்சரவையில் பரிந்துரைப்படி ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிப்பதா வேண்டாமா என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. ஏனெனில் இது இந்திய அரசாங்கத்தின் உள் விவகாரம். அரசாங்கமே இதில் முடிவெடுக்கும். ஆனால், இதுவே இலங்கையாக இருந்திருந்தால் எங்கள் முடிவே வேறாக இருந்திருக்கும்" என்றார்.

முன்னதாக டெல்லி விமான நிலையத்தில் இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்தபோதும், "நாங்கள் ஏற்கெனவே அவர்களுக்கு தண்டனை அளித்துவிட்டோம்" எனக் கூறிச் சென்றார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close