[X] Close

என்னங்க சார் உங்க திட்டம்?- அமித் ஷாவுக்கு கபில் சிபல் பதிலடி


is-this-your-idea-of-making-india

  • பாரதி ஆனந்த்
  • Posted: 12 Sep, 2018 10:29 am
  • அ+ அ-

காங்கிரஸை விமர்சித்து ஆங்கிலத்தில் அமித் ஷா கோர்வையாக பேசிய வாக்கியத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் பதிலடி கொடுத்திருக்கிறார்.

பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா, "பாஜக நாட்டை உருவாக்க உழைக்கிறது; காங்கிரஸ் தேசத்தை உடைக்க உழைக்கிறது. 2019 தேர்தலில் பாஜக வெற்றி உறுதி. 2014 மக்களவைத் தேர்தலில் பெற்றதைவிட அதிக வாக்குகள் பெறுவதும் உறுதி" எனப் பேசியிருந்தார்.

BJP working for making India; Congress working for breaking India என்று ஆங்கிலத்தில் அமித் ஷா கோர்வையாக பேசிய வாக்கியத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் பதிலடி கொடுத்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில்,

"பணமதிப்பு நீக்கம்: சாமான்யனின் முதுகை உடைத்தது
ஜிஎஸ்டி: சிறு வணிகர்கள் வியாபாரிகளின் முதுகை உடைத்தது
பெட்ரோல், டீசல் விலையுயர்வு: வாடிக்கையாளர்களின் முதுகை உடைத்தது.
இதுதான் இந்தியாவை உருவாக்கும் திட்டமா?"

எனப் பதிவிட்டுள்ளார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close