[X] Close
 

ஒடிஷா பெண்கள் விடுதியில் 5 அடி நீள நல்ல பாம்பு


odisha-cobra

கோப்புப் படம்

  • kamadenu
  • Posted: 11 Sep, 2018 17:53 pm
  • அ+ அ-

ஒடிஷாவின் பெண்கள் விடுதி ஒன்றிலிருந்து ஐந்தடி நீள நல்ல பாம்பு பிடிக்கப்பட்டுள்ளது.

ஒடிஷாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் பாரிபதா என்ற ஊரில் இந்த பெண்கள் விடுதி உள்ளது. விடுதிக்கு, தன் தோழியைப் பார்க்க வந்த பெண் ஒருவர், தோழிக்கு பக்கத்தில் பெரிய நல்ல பாம்பு இருந்ததை கவனித்துள்ளார். தோழியை அங்கிருந்து பாதுகாப்பாக நகர்த்தியபிறகு அந்தப் பகுதியில் பாம்பு பிடிப்பவருக்கு தகவல் சொல்லப்பட்டது.

கிருஷ்ண சந்திர கோச்சாயத் என்ற அவர், ஐந்தடி நீள நல்ல பாம்பை மீன் வலை மூலம் பிடித்து, பாம்புகள், பல்லிகளுக்கு ஏதுவான இடமாக சொல்லப்படும் ஸிம்லிபால் உயிர்கோள பகுதியில் விட்டுவிட்டார். 

பொதுவாக நல்ல பாம்புகள், தற்காப்பைத் தாண்டி, மனிதர்களை தாக்குவதில்லை. மேலும் நல்ல பாம்புகள் வன உயிர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட உயிரினங்கள் பட்டியலின் கீழ் வருகின்றன. 



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close