[X] Close

எப்படி இருந்த பெட்ரோல் விலை இப்படி ஆகிவிட்டது!- மீம் போட்டு கிண்டல் செய்த திவ்யா


petrol-price-hike-and-divyas-meme

  • பாரதி ஆனந்த்
  • Posted: 11 Sep, 2018 17:13 pm
  • அ+ அ-

இன்றைய தினம் இணையம் முழுவதும் அதிகம் ட்ரோல் செய்யப்படும் விஷயம் பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக பாஜக பதிவிட்ட ட்வீட் தான்.

அந்த ட்வீட்டில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆட்சியின்போதும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின்போதும் பெட்ரோல் விலை எப்படி இருந்தது என்பது குறித்து ஒரு கிராஃப் போட்டு விவரித்திருந்தனர். அந்த கிராஃப் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதனையடுத்து காங்கிரஸின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்திலும் கலாய்ப்பு மீம்கள் பகிரப்பட்டன.

அந்த வரிசையில் காங்கிரஸ் கட்சியின் ஐடி பிரிவு பொறுப்பாளராக இருக்கும் திவ்யா ஸ்பந்தனா தனது ட்விட்டரில், #MehangiPadiModiSarkar #BharatBandh என்ற ஹேஷ்டேகின் கீழ் இரண்டு புகைப்படங்களை ஒருங்கிணைத்து மீம் செய்திருந்தார்.
அது ஆமீர்கானின் பிரபலமான புகைப்படங்கள். தங்கல் படத்தின் போது உடல் எடையை ஏற்றி இறக்கிய அவர் அதை தனது ட்விட்டரிலும் பகிர்ந்திருந்தார். 

அந்தப் படத்தைப் பகிர்ந்து ஃபிட்டான ஆமீர்கான் போன்றது யுபிஏ ஆட்சி பெட்ரோல் விலை. குண்டான ஆமீர்கான் போன்றது பாஜக ஆட்சி பெட்ரோல் விலை எனப் பதிவிட்டுள்ளார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close