[X] Close

பொய்கள் 4 வகைப்படும்: பாஜகவை கலாய்த்த சசி தரூர்


there-are-lies-damned-lies-bjp-statistics

  • பாரதி ஆனந்த்
  • Posted: 11 Sep, 2018 16:36 pm
  • அ+ அ-

பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக பாஜக இன்று வெளியிட்ட வரைபடத்தைப் பலரும் பலவிதமாக கிண்டல் செய்துவரும் நிலையில், காங்கிரஸ் எம்.பி. சசி தரூரும் தம் பங்குக்கு ஒரு கிண்டல் ட்வீட்டை பதிவு செய்திருக்கிறார்.

அதில் அமெரிக்காவின் பிரபல எழுத்தாளர் மார்க் ட்வெய்ன் கூறிய வாக்கியத்தை சற்றே மாற்றியமைத்து

யன்படுத்தியிருக்கிறார். Chapters from My Autobiography என்ற புத்தகத்தில் மார்க் ட்வெய்ன், "There are three kinds of lies: lies, damned lies, and statistics" (பொய்கள் மூன்று வகைப்படும்: பொய், கடும் பொய், புள்ளியல்) எனக் கூறியிருப்பார்.

அதையே எடுத்துக் கொண்ட சசி தரூர், "As Mark Twain said, there are lies, damned lies, & BJP statistics..." என்று எழுதி 4-வதாக பாஜகவின் கிராஃபை குறிப்பிட்டிருக்கிறார்.

 

உண்மையையே பேசினால் நீங்கள் எதையும் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டியதில்லை என்ற தத்துவத்தைக் கூறியவரும் மார்க் ட்வெய்ன் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close