[X] Close
 

வாயை மூடவும்!- கேரள எம்.எல்.ஏ.,வுக்கு எதிரான பிரச்சாரத்துக்கு நடிகை பார்வதி ஆதரவு


vaayamoodalcampaign

  • பாரதி ஆனந்த்
  • Posted: 11 Sep, 2018 15:35 pm
  • அ+ அ-

கேரள மாநில எம்.எல்.ஏ. பி.சி.ஜார்ஜுக்கு எதிராக #VaayaMoodalCampaign என்றொரு பிரச்சாரம் பிரபலமாகி வருகிறது. அதுவும் பல்துறை சார்ந்த பெண்களால் பிரபலமாக்கப்பட்டு வருகிறது.

ஒட்டுமொத்த பெண்ணினமே சேர்ந்து அவரை வாயைமூடச் சொல்ல என்ன காரணம் என்கிறீர்களா?

கேரளாவில் பேராயர் மீது பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்துள்ள கன்னியாஸ்திரியையை, பாலியல் தொழிலாளி என பி.சி.ஜார்ஜ் கூறினார். ஜலந்தர் மறைமாவட்ட பேராயர் ஃபிரான்கோ முலக்கல் நிர்வாகத்தின் கீழ் கோட்டயத்தில் தேவாலயம் ஒன்று உள்ளது. இந்த தேவாலயத்தை கவனித்து வரும் கன்னியாஸ்திரி ஒருவர், முலக்கல் தம்மை பல்வேறு சந்தர்ப்பங்களில் 13 முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள எம்.எல்.ஏ. பி.சி. ஜார்ஜ், "இச்சம்பவம் குறித்து கன்னியாஸ்திரியை முன்கூட்டியே புகார் கூறாதது ஏன் என்று வினவியுள்ளார். 12 முறை ரசித்தவருக்கு, 13-வது முறை மட்டும் எப்படி பாலியல் வன்கொடுமை ஆனது?" என்று பேசினார். மேலும், கன்னியாஸ்திரியையை பாலியல் தொழிலாளி என விமர்சித்தார்.

இதனால்தான் அவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவரது பேச்சு அவமானகரமானது என தேசிய மகளிர் ஆணையம்கூட கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில்தான் #VaayaMoodalCampaign பிரபலமாகியுள்ளது.

பெண்கள் பலரும் எம்.எல்.ஏ.,வுக்கு கடிதம் அனுப்பி வருகின்றனர். அதில் அவரது ஃபோட்டோவை வைத்து அதில் வாய் பகுதியில் செல்லோ டேப் ஒட்டி அனுப்பி வருகின்றனர். பிங்க் நிற கவரில் இந்த கடிதத்தை அனுப்பி வருகின்றனர்,
இது குறித்து மலையாள நடிகை பார்வதி தனது ட்விட்டரில், "இந்த பிரச்சாரம் குறித்து பெருமை கொள்கிறேன். இந்த நபரின் வெறுப்பு பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம். வாந்தி எடுப்பதுபோல் பேசுகிறார். இவருக்கு எதிராக பிரச்சாரத்தைத் தொடங்கிய சகோதரிக்கு வாழ்த்துகளும் வணக்கங்களும்" எனக் கூறியுள்ளார். #VaayaMoodalCampaign #VaayaMoodedaPC  என்ற ஹேஷ்டேகுகள் கீழ் இதை பதிவு செய்துள்ளார்.

[X] Close