[X] Close

நாங்கள் ஏற்கெனவே அவர்களை தண்டித்துவிட்டோம்: ராஜபக்சே


rajiv-gandhi-assassination-ex-sri-lankan-president-refuses-to-comment

  • பாரதி ஆனந்த்
  • Posted: 11 Sep, 2018 13:26 pm
  • அ+ அ-

டெல்லி வந்துள்ள இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்‌ச ராஜீவ் கொலையாளிகளை நாங்கள் ஏற்கெனவே தண்டித்துவிட்டோம் எழுவர் விடுதலை இந்தியாவின் சட்ட விவகாரம் அதில் கருத்துகூற முடியாது எனக் கூறிச் சென்றார்.

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரையும் விடுவிப்பது தொடர்பாக தமிழக சட்டப்பேரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இந்நிலையில், இந்தியா வந்துள்ள ராஜபக்சேவிடம் ஏஎன்ஐ செய்தியாளர் எழுவர் விடுதலையில் உங்கள் நிலைப்பாடு என்ன என்று வினவினார். அதற்கு ராஜபக்சே, "இது சட்ட விவகாரம். அதுவும் இந்திய அரசாங்கத்தின் சட்ட விவகாரம். இதில் நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இந்திய அரசாங்கமே முடிவு எடுக்கும். நாங்கள் ஏற்கெனவே அவர்களை தண்டித்துவிட்டோம். 5 ஆண்டுகளுக்குப் பின்னர் டெல்லி வந்திருக்கிறேன். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக சுப்பிரமணிய சுவாமிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் கூறிச்சென்றார். அருகிலிருந்த சுப்பிரமணிய சுவாமி நீங்கள் என்ன கேட்டாலும் அவரிடம் இருந்து பதில் வரப்போவதில்லை எனக் கூறி சிரித்தார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றதையே ராஜபக்சே அவ்வாறு கூறிச்சென்றார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close