[X] Close

கேரளாவின் மழை முகம் ஜெய்சாலுக்கு மகிந்திராவின் மராஸ்ஸோ கார் பரிசு


mahindra-marazzo-to-jaisal

  • பாரதி ஆனந்த்
  • Posted: 10 Sep, 2018 16:05 pm
  • அ+ அ-

தனது முதுகையே பலகையாக்கி உயிர்களைக் காத்த மீனவர் ஜெய்சாலுக்கு மகேந்திராவின் புதிய அறிமுகமான மராஸ்ஸோ கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இந்த காரை பரிசாக வழங்கிய மகிந்திரா டீலருக்கு மகிந்திரா சேர்மன் ஆனந்த் மஹிந்திரா வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

கேராளவை புரட்டிப் போட்ட மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கச் சென்ற மீனவர் ஜெய்சால், பெண் ஒருவர் படகில் ஏற தனது முதுகையே பலகையாக்கி உதவினார். அவரது சேவையைப் பாராட்டி கோழிக்கோடை சேர்ந்த மஹிந்திரா நிறுவன டீலரான எராம் மோர்ட்டர்ஸ் நிறுவனம் ஜெய்சாலுக்கு மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட மஹிந்திரா மராஸ்ஸோ காரை பரிசாக அளித்தது. 

இந்த நிகழ்ச்சியில் அம்மாவட்ட கலெக்டர் யூவி ஜோஸ், மற்றும் எராம் குழும நிர்வாக சிஎம்டி சித்திக் அகமது, மேயர் தோட்டத்தில் ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஜெய்சாலை அடையாளப்படுத்திய வீடியோ:
ட்ராமா கேர் ஏஜென்சி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த மீனவர் ஜெய்சால் (32) தனது மீட்புப் பணியால் பலரையும் நெகிழச் செய்திருக்கிறார். கேரளாவின் 4 மாவட்டங்களில் இயங்குகிறது இந்த ட்ராமா கேர் ஏஜென்சி. இதன் உறுப்பினரான ஜெய்சால் மலப்புரம் மாவட்டத்தில் மீட்புப் பணிகளில் தன்னை இணைத்துக் கொண்டார். இவரது சொந்த ஊர் சப்பாடி கடற்கரை அருகே உள்ள தானூர். மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்காக மலப்புரம் மாவட்டம் வேங்கரா பகுதியில் சுவாகதமாடு பகுதிக்கு ஜெய்சால் சென்றார். 

சுவாகதமாடு பகுதியில் ஜெய்சால் மீட்புப் பணியில் ஈடுபட்டபோது அவரை அப்பகுதிவாசி ஒருவர் படம்பிடித்து வாட்ஸ் அப்பில் பகிர ஜெய்சால் பிரபலமானார். அந்த வீடியோவில் படகின் அருகே ஜெய்சால் ஒரு பாலம் போல் குணிந்து நிற்க அவர் முதுகில் ஏறி மக்கள் படகில் இறங்குவதைக் காண முடிகிறது. அப்போது அருகில் இருக்கும் யாரோ ஒருவர் செருப்பை அகற்றிவிட்டு ஏறவும் அவரும் மனிதரே என அதற்ற, ஜெய்சாலோ, "விட்டுவிடுங்கள். உயிருக்கு ஆபத்தான நிலையில் பாதுகாப்புத் தேடி செல்பவர்களை இப்படி அதற்றுவது ஆகாது. அவர்கள் செருப்புடன் ஏறினாலும் தவறில்லை" எனக் கூறுவதை கேட்க முடியும்.

 தன் உடலை வருத்தி உயிர்களைக் காப்பாற்றிய ஜெய்சாலுக்கு பாராட்டுகள் இன்னும் குவிந்தவண்ணம் உள்ளது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close