[X] Close

வெள்ளத்துக்கு பின் வறட்சி: கேரள முதல்வரை எச்சரிக்கும் எம்.எஸ்.சுவாமிநாதன்


m-s-swaminathan-on-drought

  • பாரதி ஆனந்த்
  • Posted: 10 Sep, 2018 15:29 pm
  • அ+ அ-

கேரளா உட்பட பல மாநிலங்களையும் புரட்டி எடுத்த வெள்ளத்தைத் தொடர்ந்து பரவலாக வறட்சி ஏற்பட வாய்ப்பிருப்பதாக பசுமைப் புரட்சி புகழ் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கேரள முதல்வருக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

இது குறித்து அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், "கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் ஏற்ப்பட்ட வெள்ளப் பெருக்கு நாம் விரைவில் ஒரு வறட்சியை எதிர்கொள்ளவிருக்கும் உண்மையை மறக்கச் செய்திருக்கிறது. கடந்த காலங்களில் கடும் வெள்ளத்துக்குப் பின் கொடுமையான வறட்சி ஏற்பட்டிருக்கிறது. எனவே நாம் நமது விவசாயிகளுக்கு தண்ணீர் பாதுகாப்பு ஏற்படுத்தித் தருவதற்கான நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

கேரளாவில் கடந்த மாதம் பெய்த கனமழையில் 80 அணைகள் நிரம்பின 14 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின 320-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close